வரம் கிடைக்க

#வரம் கிடைக்க..!

கண்ணுறக்கம்தான் மறந்து நாமுறங்கத் தாலாட்டி
உண்ணுஞ்சோறும் மறந்திருப்பாள் நம்அன்னை
பெண்ணுருவில் நம்மைக்காக்க பெற்றவளாய் ஓர் தெய்வம்
விண்ணவர்தான் பரிசளித்தார் விளங்கட்டுமே இந்தஉண்மை

இடறாத நடைபழக்கி இடறேதும் தீண்டாது
இமைபோலே காத்தவளை சுமையென்றால் சூழவரும்பாவம்
முதுமைவந்து சூழ்ந்துவிட்டால் காத்தவர்க்கு காப்பகமோ
கயவர்களே கூறிடுங்கள் ஈதென்ன நியாயம்..?

கருவறையில் சுமந்ததற்கே கடன்தீர வில்லையின்னும்
மடிசுமந்தாள் தோள்சுமந்தாள் கைம்மாறாய் செய்ததென்ன நீரும்
சுமந்தவளைச் சுமையாக்கி சொக்கட்டான் ஆடிநிதம்
சுயநலமே ஒழிக்காமல் வாழ்ந்தென்ன இருந்தென்ன.கூறும்.?

இன்னல்பட்டு வளர்த்தவளை தூசியென ஊதிவிட்டால்
அல்லல்பட்டு வாழக் கிடைக்கும் சாபம்
இடுகாடு செல்லும்வரை ஈன்றோரைக் காத்திடவே
மிடுக்கான வாழ்க்கைவரம் கொடுக்காமல் போகாது காலம்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (5-Mar-25, 10:35 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 4

மேலே