அடிமைப்பெண்
இந்தக் காலத்தில்
கல்விக்கூடங்களில்
லக்ஷ்மி கடாக்ஷம்
நிறைந்தவர்களின் முன்னே
சரஸ்வதி தேவி ஓர்
அடிமைப்பெண்
கல்வியா?
செல்வமா?
வீரமா?
இந்தக் கேள்விக்கு விடையை
வசதி படைத்தோர்
பயன்படுத்திக் கொள்கிறார்கள்
வசதி இல்லாதவர்கள்
விழித்துக்கொண்டே நிற்கின்றார்கள்
இந்த அடிமைத்தனத்தை
எதிர்த்து போராடி
சுதந்திரம் வாங்கி தருவதற்கு
வீரம் நிறைந்தவர்கள் தேவை..
--கோவை சுபா

