கழுதையைப் பெற்றாலும்
சில நாட்கள் முன்பு தான்
அவருக்கு நடந்திருந்தது
பிரிவு உபச்சார விழா!
விருந்துடன் நின்றுவிடாமல்
மேளதாளத்துடன் வி.ஐ.பி. போல
வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.
இப்போதெல்லாம்
அவரை அதிகம் காண முடிகிறது
கோயில் மதிற்சுவர் மீது!
கழுதை கெட்டால் மட்டுமல்ல;
கழுதையை பெற்றாலும்
குட்டிச்சுவர் தான்!

