பகற்பெய்யார் தீயினுள் நீர் - ஆசாரக் கோவை 33
ஒரு விகற்பக் குறள் வெண்பா
பகற்றெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகற்பெய்யார் தீயினுள் நீர்! 33
- ஆசாரக் கோவை
பொருளுரை:
பகற்பொழுதில் தெற்கு நோக்காமலும், இரவில் வடக்கு நோக்காமலும் இருந்து மலசலங் கழிப்பார்; பகற்பொழுது தீயில் நீரூற்றி யவிக்கார்.
கருத்துரை: மலசலங் கழிப்பவர் பகலில் தெற்கு நோக்கியும், இரவில் வடக்கு நோக்கியும் இருந்து கழித்தலாகாது.
தீ - ஓமத்தீ, வேள்வித்தீ;