நயமான சொல்லால் நன்மையே - நீதி வெண்பா 17
நேரிசை வெண்பா
நாவின் நுனியில் நயமிருக்கின் பூமாதும்
நாவினிய நல்லோரும் நண்ணுவார் - நாவிநுனி
ஆங்க டினமாகில் அத்திருவும் சேராள்முன்
ஆங்கே வரும்மரண மாம். 17
- நீதி வெண்பா
பொருளுரை:
நாக்கு நுனியில் இன்சொல்லிருந்தால் செந்தாமரை மலரின் மேல் அமர்ந்திருக்கும் இலக்குமியும், நாவினிக்கப் பேசும் நல்லோரும் மிக விரும்புவர்;
நாவின் நுனியிலே வன்சொல் பேசுவதாயிருந்தால் அந்த இலக்குமி பொருந்த மாட்டாள். அப்பொழுதே இறப்பும் வருமாம். இதனை அறி.
கருத்து: கடுஞ்சொல் சொல்வோர்க்கு தரித்திரமும், மரணமும் வரும்.

