வாழ்விசை
வாழ்விசை..! .
03 / 03 / 2025
ஆர்மோனிய கட்டைகளை
அழுத்த அழுத்தத்தான்
தேனிசை பிறக்கிறது
புல்லாங்குழலின் துளைகளை
அடைத்து விலகத்தான்
பூபாளம் இசைக்கிறது
வீணையின் நரம்புகளை
அழுத்தித் தேய்க்கத்தான்
ஆத்மாவை வருடுகிறது
தெய்வீக இசை
தோல் பறையை
அடிக்க அடிக்கத்தான்
குத்தாட்டம் போட்டு
துள்ளவைக்கிறது துள்ளலிசை
அப்படித்தான்
உன் வாழ்விலும்
அடி வாங்க வாங்கத்தான்
நரம்பாய் தேயத் தேயத்தான்
பொங்கிப் பெருகுமே
வெற்றியெனும் வாழ்விசை..! .