இன்ப பெருநாள்
இன்ப பெருநாள் இனிதுவக்கும் திருநாள்
குழந்தை ஏசுவின் பிறப்பு திருநாள்
அன்புக்கு ஏங்கும் அனைத்துலகும்
ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் அன்பு திருநாள்
அமைதியின் பிறப்பு அன்பின் பிறப்பு
துயர் துடைக்கும் தூயவனின் வரவு இதுவாக
அல்லலில் சுழலும் அகிலம்
அமைதியில் அமையாதா என ஏங்கி தவிக்கும்
எளியோர் மனங்களில் புத்தொளி
புகுந்திட பேரிடர் மறைந்திட
நேருக்கு நேர் எனும் போர்கள் தணிந்திட
இயற்கையின் இன்னல்கள் யாவும் ஒழிந்திட
இத்தூயவனின் வருகையை ஆசையுடன்
ஆர்வத்துடன் எதிகொள்வோம்
அமைதியும் அன்பும் அகிலமெங்கும்
திளைத்திட உள்ளங்கள் யாவிலும்
உண்மையும் நேர்மையும் ஓங்கி வளர்த்திட
கிறிஸ்துமஸ் பெருநாளை
பெருமிதத்துடன் கொண்டாடி மகிழ
வரவேற்போம் வையகத்தில் வரமாக