உன் விழிகளிலும் கயல்கள் நீந்தி விளையாடின

தவளைக்குத் தாகம் எடுத்தது
கூக்குரலிட்டது
ஆகாயத்திற்கு கருணை பிறந்தது
முகில் பொழிந்து தீர்த்தது
குறுகிய ஏரி நிரம்பி வழிந்தது
தவளை தன் குட்டிகளுடன் துள்ளி விளையாடியது

மழைக்காகாக மரத்தடியில் ஒதுங்கி நின்ற நீயும்
மழையில் கொஞ்சம் நனைந்தாய் மெல்லச் சிரித்தாய்
உன் விழிகளிலும் கயல்கள் நீந்தி விளையாடின !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Dec-24, 7:08 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 11

மேலே