சுழற்சி
சுழற்சி
தெரு விளக்கு தன்னத்தனியா நிற்க
மிதி வண்டி அறுபட்டு
இளைப்பாறுது
உரிமையாளர் கட்டிவிட்ட
கம்பி காவல் காக்க…
சைக்களுக்கு
சங்கிலி தேவை இப்போ
சங்கதி தெறிஞ்ச
சைக்கள் கடைக்காரர்
தடவி கொடுத்த
முதலுதவி பலித்தது
தொடர் சங்கிலி
உயிர் பெற்று
ஒரு மிதி ஓட்டம்
ஏற்றம் இறக்கம்
எளிதாய் வாய்க்க
இரு சக்கர சுழற்சி
வந்து சேர்த்தது
வர வேண்டிய் இடத்தை !
புத்துயிர் காண…
பழுதுக்கு பண வரவு காணிக்கை !