பெண்கள் வீட்டின் கண்கள்
#பெண்கள் வீட்டின் கண்கள்
இல்லத்தின் கூரை தாங்கும்
இரும்புத்தூண் பெண்கள் - பலர்
இருளைப்போக்குந் திங்கள் - பல
இடரைத்தீர்த்து முங்கள் - உயர்
இன்னுயிரைக் காக்கின்றாள்
எல்லோர்க்குமவள் கண்கள்..!
சில்லென்று பொழிந்திடுவாள்
சிந்தைக்குளிரப் பாசம் - அவள்
செயலிலில்லை வேசம் - அன்பு
செய்வதிலே வீசும் - குளிர்த்
தென்றலவள் கொண்டாடு
தெரிவைநம்சு வாசம்..!
கண்துஞ்சாள் பசியறி யாள்
கண்மணியா ளென்றும் - தம்
கடமைகளில் நின்றும் - பெருங்
கவலைகளை வென்றும் - தமைக்
கரைத்திடுவாள் குடும்பமதில்
கடுந்துயர்கள் கொன்றும்..!
மண்சிறக்க மனைசிறக்க
மங்கையர்கள் வேராம் - கண்டு
மனம்மகிழுந் தேராம் - நறு
மலர்கள் கோக்கும் நாராம் - அவள்
மலர்ந்திருக்க மணத்துடனே
மனைபெறுமே பேராம் .!
சொ. சாந்தி
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்..🌺🌺🌹🌹🌺