போற்றுங்கள் பூவையரை
#போற்றுங்கள் பூவையரை
பெண்ணில்லா உலகினையே எண்ணிப்பார்க்கிறேன்
வண்ணமில்லா காட்சிகளே வந்துபோகுது..!
குழந்தைகளே எங்குமின்றி பாலைநிலந்தான்
பழமில்லா மரவனங்கள்
பாழாய் எங்கும்..!
தாய்மொழி என்றுரைக்கத்
தாயுமில்லை
சேயைஆண் ஈன்றெடுக்கக் கருப்பையில்லை..!
பாந்தமாய் பார்ப்பதற்குப்
பாவையில்லை
வேந்தற்கு விசிறிவிட
சேடியில்லை..!
மாந்தரினம் குறைவதாக
செய்திஎங்கும்
ஏந்துகிறார் கைகளையே
அன்புப்பஞ்சம்..!
கொஞ்சுகிற மொழிமகளைக் காணவில்லை
அஞ்சுகிறார் வாரிசோ
எவர்க்குமில்லை..!
வலிவந்தால் கூவுகிறார்
அம்மாவென்று
வலிப்போக்க வரவில்லை
அம்மாஅங்கு..!
பெண்ணில்லா உலகினில் வெளிச்சமில்லை
ஆண்மட்டும் வாழுமிடம்
அழகாயில்லை..!
ஆணுக்கு நிகராக அனைத்துத் துறையில்
பேணுகிறார் பதவிகளை
பெருமைகொள்ள..!
அதிகல்வி உயரந்தான்
அளவில் இமயம்
மதியதிக மென்றாலும் மமதையில்லை..!
எத்தனைதான் உயர்ந்தாலும்
இல்லவிளக்கு
புத்துலகம் படைப்பதிலும்
புரிந்தாள் சிறப்பு..!
அரவணைப்பீர் பெண்ணினத்தை ஆடவரே
அரண்மனை வாழ்வளிப்பாள்
ஆமாம்தானே..!
கண்மணியைப் போல்பெண்ணைக் காத்திடுங்கள்
விண்ணுலகை இறக்கிடுவாள் மண்ணிலவளே..!
இனிய
பெண்கள் தின வாழ்த்துகளுடன்..🌺🌺💐💐🌺
சொ.சாந்தி