மரபுக்கவிதை மகளீர் தினக்கவிதை 0803 2025

இன்னிசை வெண்பா
மரபுக்கவிதை

மகளீர் தினக்கவிதை (08.03 2025)

முருகன் பரமன் முயலன் தருமன்
அருகன் தெரியவன் ஆனை முகத்தன்
கருவிழிக் காட்டிடும் காளி இறையை
உருவமாய் தந்தவள் பெண்

திடமுடல் கொண்ட திருமகள் பெண்டீர்
உடலுள் உயிரை உயிராய் வளர்த்து
திடமாய் கொடுத்த திரவியப் பிள்ளை
இடரைக் களைத்ததே அன்று.

இன்றோ இவைகள் இளைத்து சிறுத்தன
மென்மை குலைந்து மெதுவாய் அழியவும்
வன்மை மனமுள வல்லவர் ஆயினர்
நன்மையும் சென்றதே பாழ்.

எல்லாம் இதுபோல் சென்றிடக் காரணம்
செல்லம் கொடுத்திடும் பெற்றோர் அதனால்
செல்லாக் காசென பிள்ளையும் மாறிட
நல்லவர் மாறினர் பாதை.

பெண்களே ஞாலப் பெரியதாய் ஆற்றலாம்
விண்ணையும் தாண்டியே வெற்றியைத் தந்திடும்
கண்ணாய் குழந்தையைக் காத்திடல் நன்மையே
எண்ணந் தெளிதல் நலம்.

வேண்டாம் பிரிவினை ஆண்பெண் வகையிலே
பெண்ணின் வளர்ப்பே பிறப்பின் முழுமையாம்
கண்ணதா சன்பா டலில்சொன் னதொப்பவே
பெண்களே வாழ்வின் படி .
– நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-Mar-25, 9:14 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 33

மேலே