நன்னாடன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  நன்னாடன்
இடம்:  நன்னாடு, விழுப்புரம்
பிறந்த தேதி :  30-May-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Oct-2018
பார்த்தவர்கள்:  3457
புள்ளி:  660

என்னைப் பற்றி...

என்னுடைய படிப்பு : M. Sc(Cs), B. A.. (His), D. C. Tech. கவிதை, ஹைக்கு எழுதுவதில் மிகுந்து ஆர்வம் உள்ளதால் எழுதுகிறேன். விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கவிதை போட்டிகளில் கலந்துக் கொண்டு கவிதை வாசிப்பு வாசித்து சான்றிதழ் பெற்றுள்ளேன்.

என் படைப்புகள்
நன்னாடன் செய்திகள்
நன்னாடன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2020 7:30 pm

அழகு தொப்புள் தெரிய அரைக்கால் சட்டைப் போட்டு
அக்குல் முடித்தெரிய அழகாய் மேல் சட்டை உடுத்தி
ஆணுக்குரிய வகையில் அனைத்து நடவடிக்கையும்
அடிப்படையாய் பின்பற்றும் அழகு மகளீர் அனைவரும்
ஆபாசம் என்பது அவரவர் பார்வையில் உள்ளது என
அங்கலாய்த்து ஆர்ப்பரித்து அடங்காமல் கூப்பாடிட்டே
அழகு உடலின் பாகம் ஆசையைத் தூண்டுமாறு
அகில திரைப்படங்களில் வெளிப்படும் நாயகி போலே
ஆடையுடுத்தி அணிவகுக்கும் பெண்களே
அங்கங்கள் தெரிய ஆடைவுடுத்தின் பங்கமாகிவிடும்.
------ நன்னாடன்.

மேலும்

நன்னாடன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2020 1:20 pm

மகத்தான மதத்தை பின்பற்றுவதாய்
மதங்கொண்டு அலையும் மதவாதிகளே
மனித குலம் மாட்டிக் கொண்டு விழிக்கின்றது
மாற்ற இயலாத மாபெரும் கேடால் - உங்கள்
மதக் கோட்பாடுகளோ மத இறைவர்களோ
மாற்றியமைத்து நோய்க்கு மருந்திடுவார்களோ
எண்ணிக்கையில்லா தவறுகள் செய்யவும்
எத்தனையோ உயிர்களை சிதைத்து உண்ணவும்
எவரையும் மனிதத்தன்மை இழக்க வைக்கவும்
எத்தகைய கீழ்ச்செயலையும் தூண்டும் எண்ணங்களை
மனித அரக்க பேய்களே மாற்றிக் கொள்ளங்கள்
மாண்பான பிறவி மனிதப்பிறவி அதை
மாட்சிமையுடையதாய் மாற்றி வாழ்ந்து முடிப்போம்.
------ நன்னாடன்.

மேலும்

நன்னாடன் - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2020 6:45 pm

நோய் கண்ட உலக மாந்தருக்கெல்லாம்
நோயை அகற்றி நொடி தோறும் காத்து
செம்மைப்படுத்தி செயற்படவைக்கும்
மருத்துவர் செவிலியர் மருந்தாளுநர் யாவரும்
கோவிலில் இருக்கும் குறைத்தீர்க்கும் கடவுளாம்
எந்நிலை நோயும் எந்நேரம் தோன்றினும்
அந்நோயை அழிக்கும் அற்புத வேந்தராம்
கருக்கல் விடியல் கடும் பகல் இரவென
அறுபது நாழியும் அயராது உழைத்து
அகில மாந்தரையும் அடைகாக்கும் பறவையாம்
நெல்லினுள் வளரும் புல்லினம் போலே
இத்துறை கயவரை விலக்கிப் பார்த்தால்
பன்னெடு சிரம் புரம் பூண்ட இறைவன் இவர்களே.
------ நன்னாடன்.

மேலும்

பார்வையிட்டு கருத்துத் தெரிவித்த செந்தில் குமார் அவர்களுக்கு நன்றிகள் பற்பல . 24-Mar-2020 8:20 am
உண்மை... 23-Mar-2020 9:44 pm
நன்னாடன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2020 6:45 pm

நோய் கண்ட உலக மாந்தருக்கெல்லாம்
நோயை அகற்றி நொடி தோறும் காத்து
செம்மைப்படுத்தி செயற்படவைக்கும்
மருத்துவர் செவிலியர் மருந்தாளுநர் யாவரும்
கோவிலில் இருக்கும் குறைத்தீர்க்கும் கடவுளாம்
எந்நிலை நோயும் எந்நேரம் தோன்றினும்
அந்நோயை அழிக்கும் அற்புத வேந்தராம்
கருக்கல் விடியல் கடும் பகல் இரவென
அறுபது நாழியும் அயராது உழைத்து
அகில மாந்தரையும் அடைகாக்கும் பறவையாம்
நெல்லினுள் வளரும் புல்லினம் போலே
இத்துறை கயவரை விலக்கிப் பார்த்தால்
பன்னெடு சிரம் புரம் பூண்ட இறைவன் இவர்களே.
------ நன்னாடன்.

மேலும்

பார்வையிட்டு கருத்துத் தெரிவித்த செந்தில் குமார் அவர்களுக்கு நன்றிகள் பற்பல . 24-Mar-2020 8:20 am
உண்மை... 23-Mar-2020 9:44 pm
நன்னாடன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2020 5:58 pm

பாடுபடுத்திய படியே எம்மை
பயமுறுத்தி வீட்டில் முடக்கி போட்டு
பல விருந்து நிகழ்வுகளை பலவந்தப்படுத்தி
பன்னெடுங்கோடி கனவுகளை பாழ்படுத்தி
பம்மாத்து காட்டும் கொரோனாவே

நீலக்கல் பொன் மோதிரங்களும்
நெற்மூட்டை பல கோடியும்
நெடுஞ்சுவை செழித்தப் பழங்களும்
குளுமைத் தரும் அரசமர நிழலும்
குவித்து உமக்கு கொடுக்கிறோம்

உலகை விட்டு ஓடிவிடு
உயிரோடு எங்களை வாழவிடு
உன்னத வாழ்வில் உள்ள சுவையை
உணர்ந்து மகிழ்ந்து வாழ்ந்திடவே
உறுதுணையாய் இருக்க நீ அழிந்துவிடு.
----- நன்னாடன்.

மேலும்

நன்னாடன் - எஸ்தர் சுதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2020 2:47 pm

எழுத்து.காம் ல் படைத்தேன்
என் கவிதைகளை

வலை தளத்தில்
வளம் வந்தது என் கவி

காணாத உறவுகள்
காண்கிறது என் கவியை

என் கவியாற்றல்
வலிமை கண்டது

என் தமிழார்வம்
ஆரம்பம் கொண்டது

என் தமிழாக்கதிற்கு
ஊக்கம் தந்தது

மின்னல் வேகத்தில்
மின்னிடுகிறது தமிழ் ஆக்கங்கள்

எண்ணற்ற ஆக்கங்களை
எட்டுதிக்கம் எட்ட செய்கிறது

எத்தனையோ படைப்பாளிகள்
எங்கோ இருந்தாலும்

அத்துனை பேருக்கும்
அரவணைப்பு அளித்து
ஆனந்தம் கொடுக்கிறது

தமிழர்களை தமிழால்
தாங்கி தரம் உயர்த்துகிறது
எழுத்தால் பிணைகிறோம்
எழுத்து.காம் ல் பகிர்கிறோம்

என்றும் தொடரட்டும்......
என்றென்றும் வளரட்டும் .......

மேலும்

மிக்க நன்றி சகோதரா... 20-Mar-2020 4:42 pm
சரியான நன்றி நவிலல் 20-Mar-2020 4:10 pm
நன்னாடன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2020 6:50 pm

காக்க காக்க காக்க என்று
நாத்திகனையும் பாடவைத்த நீ
ஆத்திகம் சார் வைரலா ?
COVID19 என்று உருவெடுத்து
கோவில் கதவுகளையும் மூடவைத்த நீ
நாத்திகம் சார் வைரலா ?
நீ யாராயினும் எதுவாயினும்
கொரோனா டார்லிங்
நீ ஆடியதும் போதும் அழித்ததும் போதும்
மண்ணில் மானுடத்தை வாழ விடு
விரைவில் விடைபெற்றுச் சென்றிடு
கருணை செய்வாய் திகில் தேவதையே கொரோனா !

மேலும்

கருத்திற்கு மிக்க நன்றி கவிப்பிரிய கவி நன்னாடன் 19-Mar-2020 8:58 pm
விரைவில் விடைபெற்றுச் சென்றிடு - இதுவே சரியான வாசகம். 19-Mar-2020 6:54 pm
நன்னாடன் - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Mar-2020 8:25 am

கடைக்குட்டியாய் பிறந்தவர்கள் அனைவரும்
படு சுட்டி யாய் இருப்பார்கள் போலும்
நாட்டியத்தில் ஆரம்பித்து நாயகனாய் உச்சம்பெற்று
கைகளை கோர்த்த வடிவில் கட்சியை ஆரம்பித்து
கருத்தாழம் மிக்க நடிகன் கமலின் முடிவோ சிறப்பு
நடிகன் என்றே ஏளனிப்பினும் நாடறிந்த வல்லவனவன்
பொது அறிவு மிகுந்தவன் புத்தகங்களை கற்றவன்
பொது சித்தாந்தம் கொண்டவன் புதியதை நாடுபவன்
புரியாது அவன் போக்குபொதுஅறிவு குறைந்தோருக்கு
பிறந்தது வைணவ பிராமணன் என்றாலும்
பிசிரில்லாமல் கூறுகிறான் கடவுள் மறுப்பை என்றும்
முரண்படானவனாய் தெரிந்தாலும் முயன்று உயர்ந்தவன்
வாய்ப்பைக் கொடுத்தால் வாலியாய் பலம் பெறுவான்
வளங்குன்ற செய்தால் வருங்காலம் நிந்திக்கும்

மேலும்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. - என்ற குறளுக்கேற்ப திரு. கமல் அவர்கள் செயல்படுவதாய் எண்ணுகிறேன் எனவே தான் இந்தப் பதிவு திரு. கவின் அவர்களே பார்வையிட்டு கருத்திட்டமைக்கு நன்றி. 19-Mar-2020 8:46 am
கமலை அடையாளம் காட்டும் அழகிய கவிதை . அவர் கடவுள் கொள்கை தெளிவில்லாத குழப்பம் மய்யம் நீதி செய்யும் என்று நினைக்கிறீர்கள் . 18-Mar-2020 10:11 pm
நன்னாடன் - AKILAN அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்

மேலும்

இயற்கையின் வாழ்வில் கூட இருள் இருக்கிறது இரவு என்ற பெயரோடு ! -கிஃபா 07-Jun-2019 9:52 am
இந்த போட்டிக்கு கவிதை எப்படி அனுப்புவது ? 04-Jun-2019 12:52 am
எழுதி வெற்றி பெறுங்கள் 20-May-2019 3:07 pm
இரவு போட்டி | Competition at Eluthu. தகவலுக்கு நன்றி 19-May-2019 9:45 pm
நன்னாடன் - நன்னாடன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2019 10:30 am

வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில்
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு போட்டி
காலை வேளையை கடக்கனும் என்றால்
கடுமையான பயிற்சியை கையாள தெரியனும்

சுணக்கமாய் எழுந்து சோம்பி இருந்தால்
இணக்கமான கழல் நம்மை அண்டாது
நுணுக்கமாய் காலத்தை கணக்காய் பகுத்தால்
வனப்பமான வாழ்க்கை நம்மை வந்தடையும்

திணையளவு வாய்ப்பு திடுமென கிடைத்தால்
திடமாய் அதைப் பற்றி ஜெயிக்க முயலனும்
திகைக்க வைக்கும் சூழல் எதிரே வரினும்
திறமையாய் அதனை கைத்திறன் கொள்ளனும்

தேவைக்கு மேலே எது நம்மை நாடினும்
தேவையில்லாத் தொல்லை அதனால் சேரும்
குருதியும் கொழுப்பும் குலைப் பட்டிணியும்
காமம் கோபம் ரோகம் குரோதம் இதனுள் அடக்கம்.
---- நன்னாடன்

மேலும்

திரு வெங்கட் அவர்களே உங்கள் பார்வைக்கும் உற்சாகமளிக்கும் கருத்திற்கும் நன்றி. நம் நடைமுறை செயல்களை உற்று பார்க்கும் போது தோன்றும் கருத்துக்களை பதிவிடுகிறேன். 29-Jun-2019 2:48 pm
நல்ல கருத்துக்களை உரைக்கும் அண்ணாவிற்கு மிக்க நன்றி ..வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள் .. 29-Jun-2019 1:46 pm
தங்களின் பார்வைக்கும் அழகிய கருத்திற்கும் நன்றிகள் பல பல திரு.சக்கரை கவி அய்யாவிற்கு. 26-Apr-2019 9:00 pm
அருமை தங்களது அனைத்துப் பதிவுகளிலும் இறுதிப் பகுதியே அப்பதிவிற்கு முத்தாய்ப்பாய் அமைகிறது . இது ஒரு தனிச்சிறப்பு பாராட்டுக்கள் நன்னாடரே " தேவைக்குமேலே தேவையில்லாத தொல்லை " அருமை அருமை 26-Apr-2019 6:57 pm
நன்னாடன் - சபிமா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2019 12:32 pm

உனக்காக காத்திருக்கும்
நொடிகள் யாவும்
நாழிகையாய் தோன்றுகிறதே
என்ன மாயம் செய்தயோ .....!

மேலும்

நன்னாடன் - நன்னாடன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Nov-2018 10:05 am

அரணான மழையே நீ தான்
அரிதான பொருளாய் ஆனாய் - மக்கள்
ஆணவ போக்கை களைய
ஆங்காங்கே பொழிவைத் தந்தாய்
உரிதான காலத்தில் வந்தால்
உயிரெல்லாம் செழித்தே வாழும்
உன்னில் நீ மாற்றம் அடைந்தால்
மண்ணில் பெரும் ஏற்றம் களையும்
வன்முறையாய் மாறிவிடாதே
தலைமுறையே அழிந்தே போகும்
_ நன்னாடன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (29)

நா சேகர்

நா சேகர்

சென்னை
பழனி குமார்

பழனி குமார்

சென்னை
user photo

செல்வா

விர்ஜினியா, அமெரிக்கா
கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (33)

சபா வடிவேலு

சபா வடிவேலு

திருச்சிராப்பள்ளி

இவரை பின்தொடர்பவர்கள் (34)

Dr A S KANDHAN

Dr A S KANDHAN

Chennai
பிரபாவதி

பிரபாவதி

ஈரோடு
AKILAN

AKILAN

தமிழ்நாடு

பிரபலமான எண்ணங்கள்

மேலே