சபா வடிவேலு - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சபா வடிவேலு |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 09-Sep-1950 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 254 |
புள்ளி | : 27 |
தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உடையவன். தமிழ்க் கவிதைகள் அவ்வப்பொழுது இயற்ற இயலும். பிறர் புனைந்த கவிதைகளை சுவைக்கும் இயல்புடையவன். மதுரை கமராசர் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் . டாடா ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் அலோசகர். நான் எழுதியுள்ள நான்கு நூல்கள் : 1.சுற்றமும்,நட்பும், நானும் 2. குறள் தரும் சிந்தனைகள் 3. வீழ்க சாதி சமயம் ! வெல்க மனிதநேயம் ! 4 மன ஊஞ்சல்
உரம் தரும் உழைப்புண்டு இளமைக்கு
அனுபவம் தரும் ஆற்றலுண்டு முதுமைக்கு
உற்சாகம் தரும் ஊக்கமுண்டு இளமைக்கு
அமைதி தரும் தனிமையுண்டு முதுமைக்கு
உள்ளம் தரும் துணிவுண்டு இளமைக்கு
அவகாசம் தரும் ஆலோசனையுண்டு முதுமைக்கு
உயர்பயிற்சி தரும் சாதனையுண்டு இளமைக்கு
அடக்கம் தரும் அறமுண்டு முதுமைக்கு
உறுதுணை தரும் உவப்புண்டு இளமைக்கு
அயர்வு தரும் ஓய்வுண்டு முதுமைக்கு
இளமையே இயங்கு, இயற்று!
முதுமையே முனைவோர்க்கு உதவு!
அவரவர் கடன்
ஈன்று புறந்தந்து வளர்த்தல் தாயின் தலைக் கடன்
நன்று வளம் பெறக் காத்தல் தந்தையின் கடன்
அறமே தலையென அறிவித்தல் ஆசான் கடன்
கல்வி கேள்வி கலைகள் தேர்தல் மகவின் கடன்
கள்ளம் களவு கபடு நினையாது நட்டல் நண்பர் கடன்
கற்ற வித்தை ஒப்பவே பணி யமைத்தல் அரச கடன்
பழியும் பாவமும் படராது பேணல் சமூகக் கடன்
போர் மறந்து பேதம் துறந்து மனிதம் மலர்த்தல்
மண் மீது என்றும் மன்பதையின் கடனாம்
வழாத மாரியும் வருத்தா இயற்கையும் ஈந்து
உலகெலாம் புரத்தல் எம் இறைக் கடனே!
தலைப்புச் செய்தி:
வாக்குப் பதிவு தமிழகத்தில்
வரிசையில் நின்றனர் நடிகர்கள்
வளைத்து வளைத்துப் படப்பிடிப்பு
தவிப்பு:
நாட்டோரைச் சந்திச்சாச்சு
நா வறளப் பேசியாச்சு
நாளை முடிவு யாருக்காச்சோ!
மேட்டுக்குடி மெத்தனம்:
குடிசை வாசிகளே,
காசு வாங்கினாலும்
கறாராய் வாக்களித்தீர்!
மாளிகை வாசிகளே,
வக்கனையாய் விமர்சிப்பீர்
வாக்களிக்க வரமாட்டீரோ?
பொதுநலத்தார் பொங்கல்
பொதுநலம் பேணுவோரெலாம் பொங்குக இவ்வண்ணம்:
புன்செயல் புரியும் புல்லரைப் புரட்டிடவே பொங்குக
பொய்யே புனையும் புளுகரைப் போக்கிடவே பொங்குக
அம்பலத்தில் உலாவும் ஆபாசம் அழித்திடவே பொங்குக வல்லுறவு துணியும் வல்லூறு வதைத்திடவே பொங்குக
பொதுநலத்தார் பொங்கிடின் அவ்வண்ணம்,பொங்கலும் பொங்கிடும் இவ்வண்ணமே :
நேயம் நீண்டிட, நீதிநிலைத்திடப் பொங்கிடுமே பொங்கல்
இளையோர் ஆக்கம் நல்வழிப்படப் பொங்கட்டும் பொங்கல்
மீண்டும் மீண்டும் வேண்டுமடி
(மெட்டு: கும்மி)
கும்மியடி கூடி கும்மியடி – நல்ல
பண்டிகை நாளினில் கும்மியடி – அகப்
பகைமைத் தீய்ந்திட கும்மியடி- உயர்
பண்புகள் மேலிடக் கும்மியடி
நல்லவை எண்ணிட வேண்டுமடி – நம்
நலங்களை மீட்டிட வேண்டுமடி – நாளும்
அல்லவை தவிர்த்திட வேண்டுமடி – வாழ்வில்
தொல்லைகள் போக்கிட வேண்டுமடி
உயிர்களை நேசிக்க வேண்டுமடி – நம்
உடைமைகள் பகிர்ந்திட வேண்டுமடி – என்றும்
உண்மையாய் உழைத்தே உ
கல்வி தருவாள் கலைமகள்
கண்ணினும் மேலாம் கல்வி – நமது
கறைகள் களைவது கல்வி
கலைகள் பெருக்கிடும் கல்வி – எங்கள்
கவலைகள் போக்கிடும் கல்வி ….. (கண்ணினும்)
அறிவைப் பெருக்கிடும் கல்வி – ஆர்க்கும்
ஆக்கம் தந்திடும் கல்வி
இன்பம் ஈந்திடும் கல்வி – என்றும்
ஈயக் குறையாக் கல்வி ….. (கண்ணினும்)
உலகை உய்த்திடும் கல்வி – நமக்கு
உண்மை உரைத்திடும் கல்வி
நாளும் வளர்வது கல்வி – எவரும்
நாடிப் பெறுவது கல்வி ….. (கண்ணினும்)
பல்துறை கொண்டிடும் கல்வி – திறன்
பல்கிப் பெருக்கிடும் கல்வி
தகைமை தருவது கல்வி – எளியோர்
தாழ்வ
இறையே இலக்காய்க் கொண்டு
அன்பும் அருளும் ஈகையும்
இணக்கமும் இயல்பாய்க் கண்டு
இனிது வாழவே மதங்களாம் !
உயரிய நோக்கம் மடிந்து
உண்மை முற்றிலும் மறந்து
உள்ளம் குறுகிய மாந்தருள்
உட்பகை மூண்டதுதான் என்னே ?
மனுநீதியாம் ஒருகுலத்திற்கு ஒருநீதி
மண்ணில் வேற்றுமைகள் மண்டியதென்னே ?
‘மதம்’கொண்ட மதவாதிகள் இன்று
மனிதரைப் பிரித்தாள்வது என்னே ?
எத்தனை பிறவிகள் எடுத்தோமோ
எத்தனை மதங்கள் கொண்டோமோ
அத்தனை மதங்களும் நமதன்றோ
அதனைப் பகைப்பது அறிவாமோ ?
மத மாச்சரியங்கள் மாளுவதெப்போ
சாதி சச்சரவுகள் சாவதெப்போ
சகலரும் சமமென்பது சாத்தியமே
சாதித்துக் காட்டுவோம் இளையோரே
சாதிமதம் துறந்த கலப்புமணங்க
தில்லியில் குறைந்த செலவில் சிறந்த முறையில் புத்தகப் பிரசுரம், தமிழ்
ஆங்கிலம் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் பணிகளை விரைவாகச் செய்து கொள்ள:
தங்களின் படைப்புகளைப் புத்தக வடிவில் பெற அணுகவும் "மங்காத்தா" 8010204152
தில்லியில் குறைந்த செலவில் சிறந்த முறையில் புத்தகப் பிரசுரம், தமிழ்
ஆங்கிலம் ஹிந்தி மொழிபெயர்ப்புகள் பணிகளை விரைவாகச் செய்து கொள்ள:
தங்களின் படைப்புகளைப் புத்தக வடிவில் பெற அணுகவும் "மங்காத்தா" 8010204152
மீண்டும் வானம்பாடி
சிறகின்றிப் பறந்தோம் சிறாராய்ப் பள்ளியில்
கட்டவிழ்ந்த காளையராய்க் களித்திருந்தோம் கல்லூரியில்
பாடத்தில் திளைத்து மேடையில் முழங்கி
திடலில் விளையாடி கனவில் மிதந்து
காலடி வைத்தேன் நனவுலகில் நானும்
விழைந்தே ஏற்றேன் பயிற்றும் தொழிலை
உழைத்தே பெற்றேன் பணியினில் ஏற்றம்
உலகியல் கற்றேன் விழுந்தும் எழுந்தும்
இன்பமும் துன்பமும் இல்லறத்தில் துய்த்து
மனையாள், பிள்ளைகள், சுற்றமும் சூழ்ந்திட
சுமைகள் சுமந்து கடன்கள் முடித்து
காலச்சுவடுகளில் கற்ற பாடங்கள் பலவாம்
பணியில் ஓய்வொடும் வயதில் மூப்பொடும்
நினைவுச் சிறகுகள் விரித்தேன் மனவானில்
பாடிடலானேன் மீண்டும் வா
நண்பர்கள் (9)

மணிவாசன் வாசன்
யாழ்ப்பாணம் - இலங்கை

kavik kadhalan
thiruppur

நா கூர் கவி
தமிழ் நாடு

அ வேளாங்கண்ணி
சோளிங்கர், தமிழ்நாடு
இவர் பின்தொடர்பவர்கள் (9)

a.vignesh
madurai

அ வேளாங்கண்ணி
சோளிங்கர், தமிழ்நாடு
