அவரவர் கடன்

அவரவர் கடன்

ஈன்று புறந்தந்து வளர்த்தல் தாயின் தலைக் கடன்
நன்று வளம் பெறக் காத்தல் தந்தையின் கடன்
அறமே தலையென அறிவித்தல் ஆசான் கடன்
கல்வி கேள்வி கலைகள் தேர்தல் மகவின் கடன்
கள்ளம் களவு கபடு நினையாது நட்டல் நண்பர் கடன்
கற்ற வித்தை ஒப்பவே பணி யமைத்தல் அரச கடன்
பழியும் பாவமும் படராது பேணல் சமூகக் கடன்
போர் மறந்து பேதம் துறந்து மனிதம் மலர்த்தல்
மண் மீது என்றும் மன்பதையின் கடனாம்
வழாத மாரியும் வருத்தா இயற்கையும் ஈந்து
உலகெலாம் புரத்தல் எம் இறைக் கடனே!

எழுதியவர் : சபா வடிவேலு (29-Jun-21, 12:21 pm)
சேர்த்தது : சபா வடிவேலு
Tanglish : avaravar kadan
பார்வை : 63

மேலே