பண்டைத் தமிழ் பன்னாட்டு மொழி கவிஞர் இரா இரவி
பண்டைத் தமிழ் பன்னாட்டு மொழி ! கவிஞர் இரா. இரவி !
இந்தியாவில் தமிழ்நாடு புதுவை இரண்டிலும்
இனிய தமிழே ஆட்சிமொழியாக உள்ளது!
சிங்கார சிங்கப்பூரின் ஆட்சி மொழியாக
செந்தமிழ் கோலோட்சி வருகின்றது!
சுந்தர இலங்கையில் ஆட்சிமொழியாக
சுந்தரத் தமிழ் இன்றும் ஒலித்து வருகின்றது!
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்
அன்னைத் தமிழ்மொழி இடம் பெற்றுள்ளது சிறப்பு!
உலகின் பல நாடுகளில் பயிற்றுமொழியாக
உன்னத தமிழ்மொழியைப் பயின்று வருகின்றனர்!
ஈழத்தமிழர் இல்லாத நாடில்லை உலகில்
ஈழத்தமிழ் உலகம் முழுவதும் ஒலிக்கின்றது!
கனடா ஆஸ்திரேலியா துபாய் கத்தார்
கற்கண்டுத் தமிழ் கற்று வருகின்றனர்!
உலகில் தமிழ் மொழி ஒலிக்காத நாடே இல்லை
உலகில் தமிழன் இல்லாத நாடே இல்லை!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும்
தமிழ்க் கவியரசன் பாரதியார் கனவு நனவானது!
உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள்
இல்லங்களில் இனிய தமிழே பேசி வருகின்றனர்!
உலகமொழி ஆங்கிலத்திற்கும் சொற்களை
உதவியாகத் தந்துள்ள உன்னதமொழி தமிழ்!
உலகமொழியாக ஆங்கிலத்தோடு தமிழையும்
உலகம் அறிவிக்கும் நாள் விரைவில் வரும்!