வாழ்வில் நாமும் மதங்களும்
மதங்கள் மனிதனை விலங்காக்க கூடாது
மதங்களால் மனிதன் கடவுள் தன்மை
தன்னுள் காணவேண்டும் ஞானியாக வேண்டும்
எல்லாரும் எல்லாம் பெற்று இன்புறவே உலகில்
ஒவ்வோர் மூலையிலும் அமைதி நிலவ
தேவரும் நம்மைக் கண்டு அதிசயிக்க வேண்டும்
இன்றைய நிலைபோல் மனிதரே மனிதரை
மாய்த்துக் கொண்டால் ஒருநாள் மனித இனமே
மண்ணிலிருந்து மறைந்து விடுமே அதனால்
மதங்களெல்லாம் மனிதரை வாழ வைத்தல் வேண்டும்
எம்மதமும் சம்மதமே என்று வாழ்ந்திடில்
எங்கும் சமரசம் எல்லாரும் நண்பரே நட்பினரே உறவினர் !!!!!