நவராத்திரி பக்தி பாடல்
வீரம் வேண்டி
-----------------------
௧. வீரம் வரந்தருவாய் மாகாளி மகமாயி
அவீரத்தால் பிறர் உயிர் வாங்க அல்ல
வீரத்தால் நலிந்தோரை வாழவைக்க -அவரை
அச்சுறுத்தோம் வீனரைப் பூண்டோடு வீழ்த்தி விரட்டிடவே
ஞானம் வேண்டி
------------------------------
௨. மறைக்க காட்டும் கல்வியறிவு தந்திடுவாய் தேவி
நான்முகன் நாயகியே வேதநாயகியே வாணி
அவ் அறிவால் நானென்னும் அகந்தை முற்றும் அழிந்திடவே
என்னுள் ஞான ஒளி வீச அதன் துணையால்
இறை நாடி இறையடியே துணை என்று
தொண்டனாய் தொண்டனுக்கும் தொண்டனாய் எளிய
இனிய வாழ்வு வாழ்ந்திடவே
செல்வம் வேண்டி
-----------------------------
௩. நாட்டில் மும்மாரிப் பெய்திடல் வேண்டும்
மண் நனைந்து முப்போகம் காண
எம்மை வாழவைக்கும் வேளாள பெருந்தகையோர்
என்றென்றும் வளமாய் வாழ்ந்திடவே அவர்வாழ
அவர் நிழலில் நாங்களும் வாழ்ந்திட மகிழ்ந்து
செல்வமும் செழுமையும் எங்கும் கொழிக்கவே
எம்மண்ணில் வறுமை வேரோடு அற்றுப்போக
எல்லாரும் எல்லாம் பெற்று மகிழ்ந்திடவே
பாமரர் என்ற சொல்லே காணாது போக
அலைமகள் திருவே இலக்குமியே நாங்கள்
சேமமுடன் வாழ்ந்திட துணை செய்வாய் அம்மா
என் வேண்டுதலை ஏற்பாய் நாயகியே
ஸ்ரீ தேவி பூதேவி நீலாதேவியே திருமகளே .
------------------------------