வாழ்வோமடி
வாழ்வோமடி...!
20 / 09 / 2025
லவுக்கை இல்லா சேலைகட்டி
முறத்துல நெனவ பொடச்சி
ஓரகண்ணால என்னை ரசிச்சி
ஒதட்டோரம் புன்னகை மலர
ஓலகுடிச கொட்டாரத்தின்
என் கருப்பட்டி அழகு மகாராணியே
கரைந்து போன காலங்களை
முறத்தில் அரிசி அளைவதுபோல்
நானும் அளைந்து தேடுகிறேன்
பூத்து குலுங்கிய நாட்களெல்லாம்
உதிர்ந்த இந்த இலையுதிர்காலத்தில்
மீண்டும் பூக்க காரணமே
உன் வெள்ளேந்தி காதல்உறவே
தள்ளாத வயதில் உனைதாங்க
தடியாய் நானும் இருப்பேனடி
தளர்ந்து போனால் உன்மடியில்
தலையை சாய்த்து படுப்பேனடி
எத்தனை சென்மம் எடுத்தாலும்
சேர்ந்தே நாமும் வாழ்வோமடி...!