கவிஞர் இரா இரவி - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கவிஞர் இரா இரவி |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 12-Nov-1963 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Dec-2010 |
பார்த்தவர்கள் | : 5669 |
புள்ளி | : 3266 |
கவிஞர் இரா .இரவி,
48 வடக்கு மாசி வீதி மதுரை .
625001.rnதமிழ்நாடு .இந்தியா .அலைபேசி 9842193103 மின் அஞ்சல் eraeravik@gmail.comrnஇணையம் www.kavimalar.com
வலைப்பூ www.eraeravi.blogspot.com
முகநூல் https://www.facebook.com/rraviravi
POET R.RAVI 48 NORTH MASI STREET ,rnMADURAI 625001,TAMILNADU.INDIA CELL 9842193103 email eraeravik@gmail.com
தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராக இரா. இரவி பணிபுரிந்து வருகிறார்.
26.01.1992 குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் இவருக்குச் சிறந்த அரசுப்பணியாளருக்கான விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
‘தமிழ்த்தேனீ” பேராசிரியர் இரா. மோகன் அவர்களை நடுவராகக் கொண்ட விழிப்புணர்வுப் பட்டிமன்றங்களில் இரவி பேசினார். பொதிகை உள்ளிட்ட பலவேறு தொலைக்காட்சிகளில் இவரது உரைகள் ஒளிபரப்பாகி உள்ளன.மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவிதை பாடினார் .மாமதுரைக் கவிஞர் பேரவையின் செயலராக இருந்து செயல்பட்டு வருகிறார் .
இவரது நேர்காணல்கள், ‘பொதிகை’, ‘ஜெயா’, ‘கலைஞர்’ முதலான தொலைக்காட்சிகளி ஒளிபரப்பாகி உள்ளன.
இரவி இதுவரை 23 நூல்கள் எழுதியுள்ளார்.
‘ஹைக்கூ திலகம்’, ‘கவியருவி’, ‘கவிமுரசு’ உள்ளிட்ட விருதுகளைப் பல்வேறு இலக்கியக் கழகங்கள் இவருக்கு வழங்கி உள்ளன.
இவரது ஹைக்கூ கவிதைகள் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை தியாகராசர் கல்லூரி, திருச்சி புனித சிலுவை பெண்கள் கல்லூரி, விருதுநகர் வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி ஆகியவற்றின் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.
பல இலட்சம் வாசகர்கள் பார்த்த kavimalar.com, eraeravi.blogspot.in உள்ளிட்ட இணையங்களின் ஆசிரியராக இருந்து, இரவி கவிதை, கட்டுரை, நூல் விமர்சனங்கள் எழுதி வருகிறார், ‘RRAVIRAVI’ என்ற முகநூலிலும் எழுதி வருகிறார்.
உலகின் புகழ்பெற்றத் தமிழ் இணையங்களில் இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்த் தேனீ இரா.மோகன் தொகுத்து, சாகித்திய அகாதெமி வெளியிட்ட ‘தமிழ் ஹைக்கூ ஆயிரம்’ நூலில் இவரது 10 ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
புதுவை எழுத்தாளர் சங்கம் இவரது ‘ஹைக்கூ கவிதைகள்’ நூலைச் சிறந்த நூலாகத் தேர்வு செய்தது. பரிசும் பாராட்டுச் சான்றிதழ்களும் புதுவை ஆளுநர் முன்னிலையில் ஆளுநர் மாளிகையில் புதுவை பல்கலைக் கழகத் துணைவேந்தரால் வழங்கப் பெற்றன.
இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலகளாவிய முறையில் நடத்திய கவிதைப் போட்டியில் இரவி இருமுறை பரிசு பெற்றுள்ளார்.
மதுரை நகைச்சுவை மன்றத்தின் ஆண்டு விழாவில் முனைவர் கலைமாமணி கு. ஞானசம்பந்தன் அவர்களிடம் இருந்து இரவி ‘வளரும் கலைஞர்’ விருதினைப் பெற்றுள்ளார்.
கணினித்தமிழ்ச் சங்கம் மதுரையில் நடத்திய ‘கணிப்பொறித் திருவிழாவில் ‘தமிழும் அறிவியலும்’ என்ற தலைப்பில்லான கவிதைப் போட்டியிலும் இரவி பரிசு பெற்றுள்ளார்.
‘இரா.இரவியின் ஹைக்கூ கவிதைகளில் பன்முகப் பார்வை’ என்ற தலைப்பில் மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் க.செல்வக்குமார் (பார்வையற்றவர்) ஆய்வு செய்து ஆய்வேடு வழங்கி உள்ளார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் முனைவர் மு. பாண்டி அவர்களை நெறியாளராகக் கொண்டு செல்வன் லெ.சிவசங்கர் தமது ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டத்திற்காக ‘கவிஞர் இரா.இரவியின் ஹைகூக் கவிதைகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வேட்டினை ஒப்படைத்துள்ளார்.
15-10-2015 அப்துல் கலாம் பிறந்த நாளன்று அருள்மிகு மீனாட்சி அரசினர் கல்லூரி, டோக் பெருமாட்டி கல்லூரி, மீனாட்சி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மூன்றிலும் பேசியதைப் பெருமையாகக் கருதுகின்றார் இரவி.
‘கவிதை உறவு’ ஆண்டு விழாவில் தெய்வத்திரு ‘கலைமாமணி விக்கிரமன்’ விருதை இரவிக்கு நீதியரசர் வள்ளிநாயகம் வழங்கியுள்ளார்.
கவிமுகில் அறக்கட்டளையின் சார்பில் நடந்த ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80-ஆவது பிறந்த நாள் விழாவில் ‘எழுத்தோலை’ விருதைத் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் இரவிக்கு வழங்கியுள்ளார்.
‘கவிதை உறவு’ மாநில அளவில் நடத்திய சிறந்த நூல்களுக்கான போட்டியில் கவிஞர் இரா.இரவி எழுதிய ‘கவியமுதம்’ நூலிற்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
27-05-2017 அன்று செந்தமிழ்க் கல்லூரியில் நடந்த தனித்தமிழ்க் கவியரங்கில் கவி பாடியதற்கு செந்தமிழ் அறக் கட்டளையினர் இரவிக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினர்.
08-10-2017 அன்று சிவகாசியில் கந்தகப் பூக்கள் & நீல நிலா இணைந்து நடத்திய ஹைக்கூ நூற்றாண்டு விழாவில் இரவிக்கு ‘ஹைக்கூ செம்மல்’ விருதினை வழங்கினர்.
15-10-2017 அன்று புதுவையில் ‘மூவடி’, ‘மின்மினி’, ‘துளிப்பா’ இதழ்கள் இணைந்து நடத்திய துளிப்பா நூற்றாண்டு விழாவில் இரவிக்குத் ‘துளிப்பாச் சுடர்’ விருது வழங்கினர்.
கன்னிமாரா நூலக வாசகர் வட்டமும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் நடத்திய ஹைக்கூ நூல் போட்டியில் இரவியின் ‘ஹைக்கூ உலா’ நூல் மதிப்புறு பரிசைப் பெற்றுள்ளது.
29-07-2018 அன்று சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த ஐம்பெரும் விழாவில் அமைச்சர் க. பாண்டியராசன், கவிஞர் இரா.இரவிக்கு ‘பாரதி விருது’ வழங்கினார்.
கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூ உலா ‘நூலில் உள்ள தன்னம்பிக்கை ஹைக்கூ’ கவிதைகள், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் பாட நூலில் இடம்பெற்றுள்ளன.
மதுரையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கவிஞர் இரா. இரவியின் ‘மனதில் ஹைக்கூ’ நூல் பாட நூலாக உள்ளது.
‘பொதிகை மின்னல்’ மாத இதழ் நடத்திய நூல்கள் போட்டியில் ‘ஹைக்கூ 500’ நூல் வென்றமைக்கு 20-10-2019 அன்று நடந்த ஆண்டுவிழாவில் மூவாயிரம் பொற்கிழியும் விருதும் வழங்கினார்கள்.
இரா. இரவியின் படைப்புகள்
கவிதைச் சாரல் - 1997
ஹைக்கூ கவிதைகள் - 1998
விழிகளில் ஹைக்கூ - 2003
உள்ளத்தில் ஹைக்கூ - 2004
நெஞ்சத்தில் ஹைக்கூ - 2005
என்னவள் - 2007
இதயத்தில் ஹைக்கூ - 2007
கவிதை அல்ல விதை - 2010
மனதில் ஹைக்கூ - 2010
ஹைக்கூ ஆற்றுப்படை - 2010
சுட்டும் விழி - 2011
ஆயிரம் ஹைக்கூ – 2013
புத்தகம் போற்றுதும் - 2014
கவியமுதம் - 2014
ஹைக்கூ முதற்றே உலகு - 2015
வெளிச்ச விதைகள் - 2016
ஹைக்கூ உலா - 2017
கவிச்சுவை - 2018
ஹைக்கூ 500 - 2018
இறையன்பு கருவூலம் - 2019
இலக்கிய இணையர் படைப்புலகம் - 2019
ஏர்வாடியார் கருவூலம் -2019.
உதிராப்பூக்கள்-2020.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரியில் பாடத்திட்ட தேர்வுக்குழு உறுப்பினராக நியமனம் செய்துள்ளனர் .
தூத்துக்குடி ABCகல்லூரி முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி ஜானு கவிஞர் இரா .இரவியின் "ஹைக்கூ முதற்றே உலகு "நூலை ஆய்வு செய்து ஆய்வேடு வழங்கி உள்ளார் .
பெருந்தலைவர் காமராஜர் 100
நூல் ஆசிரியர் : தமிழ்ச்செம்மல் வை. சங்கரலிங்கனார்!
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி!
வெளியீடு : MJ பதிப்பகம், திருச்சி, பக்கங்கள் : 96, விலை : ரூ.100.
******
‘பெருந்தலைவர் காமராஜர் 100’ என்ற தலைப்பில் நூலாசிரியர் புலவர் தமிழ்ச்செம்மல் முனைவர் வை. சங்கரலிங்கனார் அவர்கள், இதுவரை அறிந்திடாத கர்மவீரர் காமராசரின் இளமைக்கால தகவல்கள் 100-ஐ வியக்கும் வண்ணம் வழங்கி உள்ளார். பாராட்டுகள்.
புதுக்கவிதையின் தாத்தா மேத்தா அவர்களின் வைர வரிகளுடன் பதிப்புரை உள்ளது. எழுத்தாளரும், பேச்சாளருமான நெல்லை கவிநேசன் அவர்களும் வாழ்த்துரை வழங்கி உள்ளார். தோரணவாயில்களாக உள்ளன. இன்னு
எழுச்சியூட்டும் தமிழ்க் கவிதைகள்!
நூல் ஆசிரியர் : கவிஞர் அ. அழகையா!
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி!
வெளியீடு : அருள்மொழிப் பிரசுரம், D1, ஸ்ரீவாரி ப்ளாட் 23/11, கவனாத் தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை – 600 015. பக்கங்கள் : 112, விலை : ரூ.80.
******
நூலாசிரியர் கவிஞர் அ. அழகையா அவர்கள், மாமதுரைக் கவிஞர் பேரவையில் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் பாடிய கவிதைகளையும் மற்ற கவிதைகளையும் தொகுத்து நூலாக்கி உள்ளார். இது இவரது இரண்டாவது கவிதை நூல். பெயருக்கு ஏற்றபடி எழுச்சியூட்டும் தமிழ்க் கவிதைகளாக உள்ளன. இன்றைய சமுதாயத்திற்கு விழிப்புணர்வு விதைக்கும்வண்ணம் தமிழ்ப்ப
தீண்டாதே தீயவை !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !
வாழ்த்துரை : ப.திருமலை, மூத்த பத்திரிகையாளர் !
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளுதெரு, தி.நகர்,
சென்னை – 17.
தொலைபேசி : 044 2434 2810. பக்கம் : 60, விலை : ரூ.50.
******.
பாடமாக வைக்க வேண்டிய நூல்...
‘தீயவை தீண்டாதே’ என்பது, கவிஞர் இரா.இரவி அவர்களின் 25ஆவது கவிதைத் தொகுப்பு நூல். இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். கவிஞர் இரவி அவர்களின் கவிதை நூல்களை வாசிப்பதில் எனக்கு எப்போதுமே அலாதி இன்பம். காரணம், அவை எளிமையாகவும், சமூக அக்கறையுடனும் இருக்கும்.
கவிதை ஒரு படிப்பினையைக் கொடுக்க வேண்டும். கவிதை
தீண்டாதே தீயவை
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி,!
வாழ்த்துரை : மு.அழகுராஜ், முதுகலை ஆசிரியர் (பணி நிறைவு)
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளுதெரு, தி.நகர்,
சென்னை – 17.
தொலைபேசி : 044 2434 2810. பக்கம் : 60, விலை : ரூ.50.
******
கவிஞர் இரா. இரவி அவர்களின் படைப்பான கவிதை நூல் ‘தீண்டாதே என்றும் மது’ என்று தொடங்கி, ‘சிகரெட்’ (வெண்சுருட்டு) எனும் பத்து தலைப்புகளில் கவி பாடியுள்ளார்.
சமுதாயக்கேடுகளான மது, புகையிலை, சூதாட்டம், சிகரெட் போன்றவற்றை தன் கவியால் எளிய நடையில் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இக்கவிதை நூலைப் படைத்துள்ளது சிறப்பாகும்.
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
கட்டுவதற்கு
கயிறுதான்
தங்க முகக்கவசத்திற்கும் !
வேறு எங்குமில்லை
சொர்க்கம்
பிறந்த ஊர் தவிர !
அக்கரைப் பச்சையென
சென்றவர்கள் திரும்புகின்றனர்
இக்கரை !
புரட்டிப்போட்டது
புதிய பொருளாதாரத்தை
கொடிய கொரோனா !
சொல்லவில்லை
எந்த சோதிடரும்
கொரோனா வருகை !
விட்டுவைக்கவில்லை
அமைச்சர்களையும்
கொரோனா !
மழைக்கு
ஒதுங்கமுடியாத குடை
காளான் !
வல்லரசு தொடங்கி
சிறிய நாடுகள் வரை
ஆடியது கொரோனா !
வரியைக் கூட்டி
வாங்கிக் கட்டினர்
கிருமி நாசினிக்கு !
காத்திருக்கிறார்கள்
கடை திறக்குமுன்
குடிமகன்கள் !
மூடும் நேரத்திலும்
முண
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
குடியை விட்டவனும் தொட்டான்
திரும்பவும் கெட்டான் சீரழிகிறான்
மதுக்கடைகள் திறப்பு !
வேதனையிலும் வேதனை
குடிகார தேசமானது
காந்தி தேசம் !
தடைகள் உழைப்பதற்கு
தடையில்லை குடிப்பதற்கு
வாழ்க மக்களாட்சி !
ஒரு தரம் இரண்டு தரம்
மூன்று தரம்
இந்தியா !
தனித் தனியாக தனியாருக்கு
விற்பதை விட மொத்தமாக
விற்றுவிடுங்கள் !
நின்று விட்டது வருமானம்
நிற்கவில்லை செலவு
இன்னலில் ஏழைகள் !
.நெடுஞ்சாலை ஓரம்
நடப்பதும் குற்றம்
புதிய இந்தியா !
கேட்கவில்லையா ?
புலம்பெயர்ந்தோர்
புலம்பல் !
கட்டுக்குள் உள்ளது
என்பது இதுதானோ ?
கொரோனா !
அடிப்படை தே
144. கவிஞர் இரா .இரவி !
பெரி வணிக வளாகங்கள் மூடப்பட்டன
சிறிய வணிக கடைகள் திறக்கப்பட்டன !
வழக்கம்போல கீரை விற்பவர் மிதி
வண்டியில் வந்து விற்று சென்றார் !
மருத்துவமனைகள் பல மூடப்பட்டன
மருந்தின்றி கை வைத்தியம் கை கொடுத்தன !
நகைக்கடைக்காரர்களின் கொள்ளை நின்றது
நகை அட்சய திருதியிலும் விற்காமல் நின்றது !
திரையரங்குகளின் கொள்ளை நின்று போனது
திரைப்படம் தொலைக்காட்சியில் வந்தது !
துணிக்கடைக்காரர்களின் கொள்ளை நின்றது
துணி புதுத்துணி அவசியமின்றி போனது !
சவரம் செய்யும் செலவு கூட சேமிப்பானது
சவரக்கடைக்காரர்கள் பட்டினியில் வாடினர் !
பணக்காரர்களும் நடுத்தர வர்க்கமும்
குடும்பத்துடன் களித்திருப்போம் ! கவிஞர் இரா .இரவி !
கொடிய கொரோனா தந்துள்ள அறிய வாய்ப்பு
குடும்பத்துடன் கழித்திருப்போம் களித்திருப்போம் !
இயந்திரமயமான உலகில் இயந்திரமாக இருந்தோம்
இனியாவது அன்பு செலுத்தி மனிதம் பேணுவோம் !
நேரமில்லை என்று ஓடிக் கொண்டே இருந்தோம்
நின்று நிதானித்து மழலைகள் மகிழ்விப்போம் !
காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடினோம்
கனிவாக இல்லத்தில் அமர்ந்து பேசுவோம் !
பரபரப்பாக என்றும் இயங்கி வந்தோம்
பண்பாக அமர்ந்து பாசம் பொழிவோம் !
பம்பரமாக நாளும் சுழன்று வந்தோம்
பாதிப்பு வராமலிருக்க இல்லத்தில் இருப்போம் !
அடுத்து வீட்டுக்காரரை அறியாமல் இருந்தோம்
அடுத்த வீட்
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
குழந்தைகளில் சில
ஆள் வளருகின்றன
அறிவு வளரவில்லை !
உணரவில்லை மக்கள்
புற்றுநோய் வந்தபோதும்
நெகிழியின் தீங்கு !
சோதனையின் முடிவு
கசந்தது
இனிப்பு நோய் !
வெள்ளைக்காரன் தந்த
வெள்ளை நஞ்சு
சர்க்கரை ( சீனி )
பெரிய மனிதர்களையும்
மிகச்சிறியோராக்கும்
சினம் !
இருப்பிடம்
இதயமன்று மூளை
மனம் !
இதயமாற்று
சிகிச்சைக்குப் பின்னும்
நினைவில் அவள் !
கனிய வைக்கின்றனர்
ரசாயனத்தால்
கனிகளை!
மனிதனுக்கு
அழகு
மனிதநேயம் !
இல்லை வடிவம்
இல்லாவிடில் தொல்லை
அன்பு !
தகுதியற்றது என்றார்கள்
தகுதியாக்குவோம் நாம்
பெண்கள் வாழ !
செயலற்று இயங்குகிறேன்
பாதாளத்தின் ஆழத்தில்
சில கணம்
வானத்து விண்மீன்களில்
சிலகணம்
இதம் தரும் தென்றலோடு
சில கணம்
இம்சிக்கும் சித்திரையின்
வெம்மையோடு சில கணம்...
என் எண்ணங்கள் எதிர்
தாக்குதல் இன்றியே
சமாதானக் கொடியை
நீட்டி நிற்கிறது
சமாதானமின்மைக்கு....
எனக்குள் நானே எதிரியாய்
பிடிப்பு குறையாமலிருக்க,
பிடித்ததைப்
புரட்டிப் போட எண்ணப்படுகிறேன்
புலப்படவில்லை
முடிவற்றுப்போனதா? - என்
ஆரம்பமே முடிவாய் திருத்தமற்று.
என் திருத்தமோ, குழப்பமுற்று.
மரணித்தது
வீழ்ந்தோம் நானும்
என் எழுதுகோலும் இனி
மீண்டெழ எண்ணமில்லை
இருவருக்கும்.
நாங்கள் இன்னும் மீதமிருக்கிறோம்....
கருத்துச் சுரங்கம் கொன்றை வேந்தன்!
கவிஞர் இரா. இரவி.
ஔவையார் பாடிய ‘கொன்றை வேந்தன்’ குழந்தைகளுக்கு என்று பெரியவர்கள் படிப்பதில்லை. கொன்றை வேந்தன் பொருள் புரிந்து, கூர்ந்து படித்தால் வாழ்க்கைக்கு வழி காட்டும். ஒளி கூட்டும்.
கொன்றை வேந்தனில் 91 கருத்துக்கள் இருந்தாலும், அனைத்தும் அருமை என்றாலும், ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் கருத்துக்கள் எவை என்று ஆராய்ந்த போது கிடைத்தவை உங்கள் பார்வைக்கு. இரத்தினச் சுருக்கமாக ஒரே ஒரு வரியில் உன்னதமாக உயர்ந்த கருத்துக்களைப் பாடி உள்ளார் ஔவையார்.
கீழோ ராயினுந் தாழ உரை!
உனக்குக் கீழ்ப்பட்டவரிடத்தும் பணிவாகப் ப
நண்பர்கள் (51)

ப்ரியன்
சென்னை

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

கி கவியரசன்
திருவண்ணாமலை ( செங்கம் )

நாகூர் லெத்தீப்
சென்னை
இவர் பின்தொடர்பவர்கள் (52)

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா
நாகர்கோயில்(குமரி மாவட்ட

எஸ்.கே .மகேஸ்வரன்
பொட்டகவயல், முகவை ,
