ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

குடியை விட்டவனும் தொட்டான்
திரும்பவும் கெட்டான் சீரழிகிறான்
மதுக்கடைகள் திறப்பு !

வேதனையிலும் வேதனை
குடிகார தேசமானது
காந்தி தேசம் !

தடைகள் உழைப்பதற்கு
தடையில்லை குடிப்பதற்கு
வாழ்க மக்களாட்சி !

ஒரு தரம் இரண்டு தரம்
மூன்று தரம்
இந்தியா !

தனித் தனியாக தனியாருக்கு
விற்பதை விட மொத்தமாக
விற்றுவிடுங்கள் !

நின்று விட்டது வருமானம்
நிற்கவில்லை செலவு
இன்னலில் ஏழைகள் !

.நெடுஞ்சாலை ஓரம்
நடப்பதும் குற்றம்
புதிய இந்தியா !


கேட்கவில்லையா ?
புலம்பெயர்ந்தோர்
புலம்பல் !

கட்டுக்குள் உள்ளது
என்பது இதுதானோ ?
கொரோனா !

அடிப்படை தேவைகளுக்கே
அல்லாடும் மக்கள்
வல்லரசாகுமா ?

ஏழை மேலும் பரம ஏழையாகிறான்
பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான்
புதிய பொருளாதாரம் !

தனி ஓவ்வொரு மனிதனுக்கும்
இன்று உணவில்லையே
என்ன செய்யலாம் பாரதி !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (19-May-20, 8:33 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 116

மேலே