கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

#கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்
🌲🌟🌲🌟🌲🌟🌲🌟🌲

ஏசுநாதர் வந்துதித்த இனியத்திரு நாளிது
நேசித்திரு அனைவரையும்
நிலைத்திருக்கும் உறவது..!

மரங்களிலே விளக்குகாய்க்கும் மாலைநேரம் இனிக்குது
மரத்தினுச்சி மீதமர்ந்து
மயக்கிவிண்மீன் சிரிக்குது..!

தேவசபை எங்கிலுமே
திருமறைநூல் ஓசையாம்
மேவுமின்பம் எவரிடத்தும்
மேன்மையான நாளிதாம்..!

கிணிகிணி கிணிகிணியென
கேட்கும்மணி யோசையில்
கிட்டவந்து சேருதுகாண்
கிருத்துமகான் வாழ்த்தொலி..!

யார்க்குமிங்கே
யாவும்கிட்டி இனியவாழ்வு வாழ்கவே
கார்விலக்கும் கர்த்தர்ஆசி
களிப்புடனே வாழ்கவே..!

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.🌲🌟🌲

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (26-Dec-24, 10:25 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 7

மேலே