பூமி தாய்
பூமி தாய் கண்ணீர் சிந்துகிறாள்
பூமி தாய் தான் பெற்ற பிள்ளைகளின் பாவத்தால்
தன் இரு கரங்களாலேயே காவு கொடுக்கிறாள் - பூகம்பத்தால்
சுமைகள் சற்று குறைய பெற்று - இளைப்பாறுகிறாள்
திரும்பவும் பாவ சுமை கூடினால்
பூகம்பமாகவோ அல்லது
பூமி பிளவுக்காகவோ சுமைகளை
குறைக்க காத்துகொண்டு இருக்கிறாள்