சுப்பிரமணிய பாரதி

சுப்பிரமணிய பாரதி
பாரதத்தின் அருள்நிதி
ஆங்கிலேயர் அரசினை
மிரள வைத்த கவிநிதி
வெள்ளையரை விரட்டிவிட
சிங்கம் போல கர்ஜித்தார்
சுதந்திரம் நாம் அடையுமுன்பே
அடைந்துவிட்டதாய் உரைத்தார்
இந்தியரின் இதயங்களில்
ஒற்றுமையைப் பயிரிட்டார்
தமிழ் மொழியின் இனிமைதனை
அள்ளிப் பருகி சுவைத்திட்டார்
தமிழ் நாட்டு மக்களுக்கு
வீரத்தை அவர் விதைத்திட்டார்
கண்மூடி பழக்கங்களை
கவி பொழிந்து ஒழித்திட்டார்
சிறுவர்களை சிறக்கவைக்க
ஊக்கமூட்டி பாடினார்
மகளிர்தம் பெருமைகளை
வானளாவிப் பேசியே
பெண்களின் விடுதலைக்கு
அயராது உழைத்திட்டார்
மனிதர்களில் பேதமில்லை
சாதி சமயம் சாடினார்
முப்பத்திரண்டு மொழி தெரிந்தும்
பொருளின்றி வாடினார்
ஏழ்மையில் அவர் உழன்றாலும்
பசியில் தலை சுழன்றாலும்
பொதுமக்களின் நலத்திற்காக
இறுதிவரை செயல் புரிந்தார்
பக்தி கொண்டு காளியிடம்
மக்களுக்கு முக்தி கேட்டார்
முப்பத்தாறு வயதிலேயே
யானை மூலம் முக்தி கண்டார்
பிறர்க்கெனவே தான் வாழ்ந்து
தன் வாழ்க்கைதான் தாழ்ந்து
பாரதத்தின் தலைமகனாய்
வாழ்நாள் முழுதும் வாழ்ந்த
மகாகவி பாரதி
சாதாரண மனிதனல்ல
நம்மை செம்மை செய்திட
நன்மை செய்த மாமுனி!
உலகக் கவிஞர் பாரதியை
நினைந்து நாம் போற்றிடுவோம்
அவர் புனைந்த கவிதைகளின்
பொருள் தெளிந்து வாழ்ந்திடுஓம்

எழுதியவர் : ஜாய்ராம் (21-Dec-24, 5:10 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 28

மேலே