மயூரனுக்கு மாலைச் சூட்டி…

#மயூரனுக்கு மாலைச் சூட்டி…!

செந்தூரப் பூக்களெல்லாம் சிரித்தமுகங் காட்டுதுகாண்
அந்தப்பூ ஆசையாவும்
ஆய்ந்திடவா ரீர்தோழி
வந்துதிக்கக் காத்திருக்கும்
வானொளியான் மேலெழும்முன்
முந்தியெழ வேண்டுகிறேன்
மோகமேன்து யில்விடுப்பீர்
எந்திரிக்க நல்தருணம்
எழுவீர்பூ கொய்திடலாம்
மந்திரன்ம யூரனுக்கு
மாலைகள்தொ டுத்திடலாம்
சந்திரனே நாணுகின்ற
தன்னொளி மேனிதன்னில்
சுந்தர மாலைசாத்தி
துய்த்தலின்ப மெம்பாவாய்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (19-Dec-24, 8:05 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 7

மேலே