பேறு பெற்றோம் சொ சாந்தி

#பேறு பெற்றோம்..

கார்க்குழல் கன்னியர்கள் காலையில் கண்விழித்து
மார்கழித் திங்களிலே வாயிலில் கோலமிட்டார்
நாரெடுத்துப் பூவெடுத்து
நங்கையர்கள் தொடுக்கின்றார்
ஊர்மணக்கும் மாலைகளை உற்சாகம் மேலிடத்தான்
கார்மழைப் பொழிகிறது
கன்னியர் கூந்தலிலே சேர்ந்திசைத்தார் கானமது
சேருதேகண் ணன்செவி
பார்த்தனின் சாரதிக்குப்
பாங்கியர் மாலையிடும்
பேரழகைக் காணுதற்கு
பேறுபெற்றோ மெம்பாவாய்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (18-Dec-24, 11:01 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 24

மேலே