போர் இல்லாத உலகம்
போர் இல்லாத உலகம்.
🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩
அண்டை எனும் சொல்
அகிலத்தில் அழிந்திட்டால்
சண்டை எனும் சொல்
சாவது நிச்சயம்...
அதற்கு...
வேண்டியது கிடைக்கனும்
வேண்டிய அளவு கிடைக்கனும்
ஆசைகளை அடக்கி வைக்க
அசோகர் மனம் பிறக்கனும்...
எல்லைகளை அழிக்கனும்
எல்லாம் நமதென நினைக்கனும்
எதிரி என்ற சொல்லில்லா
அகராதிகள் படைக்கனும்...
வாகை சூடிய வரலாற்றை
புத்தகத்தில் கிழிக்கனும்
பிரிவு என்ற எண்ணத்தை
பிறப்பிலேயே ஒழிக்கனும்...
உயிரிகள் எல்லாம் வயிரற்று இருக்கனும்
உணவின் தேவையை தலைமுறை மறக்கனும்...
கூர்ந்து நோக்கிடின்......
ஆறறிவில்லா மனிதன் பிறந்திடின்
போரில்லா உலகம் புவியில் சாத்தியம்...
🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩🪩

