கசெல்வராசு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கசெல்வராசு |
இடம் | : கபிலக்குறிச்சி |
பிறந்த தேதி | : 03-Jun-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 631 |
புள்ளி | : 188 |
இடைநிலை ஆசிரியர்
நம்பனும்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
வெள்ள நீர் வடிய
பம்ப் செட் அமைப்பது
டெங்கு காய்ச்சலுக்கு
எந்திரம் கட்டுவது
😜😜😜😜😜😜😜😜😜😜
கட்டுமானம்
💨💨💨💨💨💨💨💨💨💨💨💨
வெள்ளத்தில் செல்ல
பாலம் கேட்டோம்
கிடைத்தது.....
வெள்ளம் வந்தது
பாலம் சென்றது.
🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊🌊💧💧💧
முதல்வர்
🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧
ஆயிரம் கோடி
நிவாரணம் கேட்டு
அழகாய் கடிதம்
எழுத தோணுது
அடுத்த புயலே
எப்போது வருவாய்
ஆசைப்பட்ட
பலனெப்பத் தருவாய்
காகிதத்தோடு
கரையில் நானும்
கனவு சீக்கிரம்
கடவுளே பழிக்கனும்
ஆக்கிரமிப்பு
🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧🌧
மழையின் குடியிருப்பில்
வீடுகள் புகுந்தன
ஆக்கிரமிப்பை
அகற்ற கோரி
வீடுகளுக்குள் புகுந்து
வெள்ள நீர் போராட்டம்
😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤
கையூட்டு
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
இகந்துழி (தொலைவான இடம்)அல்ல இன்னும் இன்னும் தூரம் தான் -இயலாது
இந்தியா நினைத்திடும் வல்லமை அடைந்திட
ஊகை (கல்வி)பெறுவது உயர்வுக்கு என்பது போய் -- மனிதன்
வாகை சூடுகிறான் வாங்கும் கையூட்டில்
கையூட்டுப் பைக்கம்(பிச்சை) பைகளை நிறைக்காமல் --அதிகாரி
கையெழுத்துப் பேனா மைதனை கக்காது
வகந்தம்(காற்று) கூட வாங்கித் தான் ஆகனுமாம் --சொல்கிறான்
காற்றின்றி வாழலாம் காசின்றி எப்படி
சட்ட ஒடிசிலில்(கவணில்) ஓட்டலாம் குற்றத்தை --கூரிய
பணக்கத்தி அறுத்திடும் கயிர்தொடுக்க ஆளில்லை
கழுமம் (குற்றம்)என்றறிந்தும் கையூட்டு மளியவே - உணவுக்காய்
உழுபவன் தவிர்த்தி
புரிதல்..................
🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️🎗️
அடுத்தடுத்த மறுகு வாழும் அறிவழகி எழிழரசும்
அடுத்த வாரம் முடிக்கவிருந்த முதுகலை பட்டத்தேர்வு
வலம்புரியும் இடம்புரியும் வாய்மூடிச் சேரும் அந்த
பணிலங்கள் போல் இருவருக்கும் பாசப்போரை என்ன சொல்ல
ஆனம் மட்டும் இருவருக்குள் அலையலையாய் பரிமாற
பானம் ஒன்றும் தேவையில்லை தாகம் ஏதும் தோன்றவில்லை
வேறாரும் பார்க்காமல் ஆராமம் சந்திப்பு
ஊராரே மெச்சும்படி உயர்ந்து வாழ அச்சாரம்
புஞ்சை மண் பெற்றெடுத்த புழுதிக்காடே ஆனாலும்
ஞஞ்சைக்கொன்றும் குறைவில்லை ஒருவர்மேல் ஒருவர்க்கு
பனி விலகா அதிகாலை பலிச்சொல்லும் விழுந்துவிட
துனி நிறைந்த வேதனையில் துடித்து அவள் ஓடிவி
...................மண்ணுள்..................
🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕🥕
மண்ணுள் விளையும் கிழங்கே-
நீயேன் ஒரு துளி மண்ணையும்
தன்னுள் நுழைய மறுக்கின்றாய்
தரணியில் நேர்மையை மதிக்கின்றாய்
கண்ணியமாக விளைவித்து
புண்ணியம் தேடும் போதிலும்
எண்ணிய பணத்தினை ஈட்டிட
திண்ணியாய் வாழும் மனிதனோ
எண்ணைகள் முழுக்க கலப்படம்
எப்படி நடக்குது அதிக்கலம்
தண்ணியில் எழுதிய தரநிலை
புண்ணியம் அங்கே என்னவிலை
மண்டுகள் நடத்தும் அரசாங்கம்
நண்டுகளாய் பணம் நோண்டும்அதிகாரி
எல்லா நோய்களும் அர்ப்பணம்
எமனே உனக்குயிர் சமர்ப்பணம்...
🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺🍺
கழத்துமேட்டில் தொட்டில்கட்டிகண்மணியை தூங்கவிட்டு
காதுக்கெட்டும் தூரத்துக்குள்
களை பறிச்சா நெல் வயலில்
வரப்பு மேல துணியை விரிச்சு
வச்சிருந்த செல் போனில்
செண்பகத்தக்கா கூப்பிட்டு
வம்பா அந்த சேதி சொன்னா
சீக்கு ஏதோ பரவுதாமா
சீனாக்காரனுக்கு தொத்திகிச்சா
காத்து கருப்பு வந்தா கூட
கழிச்சு போட்டு பொழைச்சுகலாம்
இந்த
தொத்து நோவு தொத்திகிட்டா
செத்து தான போவனுமாம்
ஊரடங்கை போட்டுகிட்டு
ஊட்டுகுள்ள ஒழிஞ்சுகனுனு
டிவி எல்லாம் சொல்லுதக்கா
பாவி சனம் என்ன செய்ய ?
கோவில் கொளம் சாத்திட்டாங்க
காரு பஸ்ஸு நிறுத்திட்டாங்க.....
அடி
செல்லாத்தா புள்ள
செண்பகமே கொஞ்சம் கேளு
வெள்ளாமைய விட்டுபுட்டு
வீட்டுக்குள்ள ஒ
ஏழைப்பெண்
😚😚😚😚😚😚😚
புதுப்பொழுது சூரியனும்
புலர்ந்து வெளியில் வர
புதுநாளை வழிநடத்த
புறப்பட்டாவெள்ளையம்மா
நெலிஞ்சுபோன தேகுசாவில்
அழிஞ்சுபோக கரிதேச்சு
ஒழக்கழவு அரிசிபோட்டு
வழக்கமான நீர் நிறைச்சு
பனையோலை படலோரம்
பத்தவச்ச அடுப்புமேல
பத்தரமா தூக்கி வச்சி
தட்ட வச்சி. மூடிவச்சா
கத்தை விறகு எரிச்சுக்கூட
செத்த நேரம் வேகனுனு
நெருப்பு மேல பொடியவச்சி
பொருப்பாத்தான் எறக்கி வச்சா
குழம்பு ஒன்னு வக்கலான்னு
கொண்டு வந்த பருப்பு எடுத்து
ரெண்டு கையி அளந்து போட்டு
வண்டு மிதக்க நீர் நிறைச்சா
ஓட்டைபோட்ட பருப்பு எல்லாம்
போட்டி போட்டு மிதந்து வர
கையால வடிகட்டி
கழனி தண்ணி பிரிச்ச
மரணபயம்
********************
அச்சாணி இல்லா சகடம் போல்
ஆனது இன்றைய மனித நிலை
மாடி குரம்பை பேதமின்றி
மண்ணில் பரவுது பெருந் தொற்று
உலகம் முழுதும் சிற்றில் போல்
உலவுது இந்தப் பெருந் தொற்று
முகக்கவசம் போடும் ஓர்வுமிங்கே
முயற்சித்தும் ஒன்றும் பயனில்லை
காற்றும் உட்புகா காழகத்தில்
கருகி அல்கல் வேகின்றோம்
கங்குல் பொழுதில் வீடமர்ந்தும்
கண்ட பலனும் ஒன்றுமில்லை
கபசுர நீரை அயிலச் சொன்ன
கதையும் இப்ப பொய்யாச்சு
அரசும் மருந்தும் பல முயன்று
அத்தம் தெரியாப்பயணத்தில்
அசும்பில் சிக்கிய சகடம்போல்
அத்தனை மனிதனும் நிற்கின்றான்
நமக்கும் வந்திடும் என்றெண்ணி
அல்கல் பயந்தே வாழ்கின்றோம்
உறவிக்குள்ள தைரியமும்
உல
இயற்கை
%%%%%%%%
அதிக்கலம் செய்த மனிதனால்
அவயங்கள் ஒவ்வொன்றாய் இழந்திட்டேன்
கொரோனா உசுப்பி அனுப்பியே -என்
கொடுமைக்கெல்லாம் விடை கொடுத்தேன்
இயற்கையான என் அழகை
இயல்பு நிலைக்கு மீட்டெடுத்தேன்
பயத்தை மனிதன் மூளைக்குள்
பதிய வைத்தேன் அழியாமல்
தீங்கு செய்த கைகளையே
திரவம் ஊற்றி கழுவுகிறான்
முகத்தை காட்ட வெட்கப் பட்டே மூடி மறைத்திப்ப அழைகின்றான்
நான் முன்பே கவிதைகளை பதிவு செய்து உள்ளேன் பதிவு பக்கம் திறக்க முடியவில்லை