இயற்கை

இயற்கை
%%%%%%%%
அதிக்கலம் செய்த மனிதனால்
அவயங்கள் ஒவ்வொன்றாய் இழந்திட்டேன்
கொரோனா உசுப்பி அனுப்பியே -என்
கொடுமைக்கெல்லாம் விடை கொடுத்தேன்
இயற்கையான என் அழகை
இயல்பு நிலைக்கு மீட்டெடுத்தேன்
பயத்தை மனிதன் மூளைக்குள்
பதிய வைத்தேன் அழியாமல்
தீங்கு செய்த கைகளையே
திரவம் ஊற்றி கழுவுகிறான்
முகத்தை காட்ட வெட்கப் பட்டே மூடி மறைத்திப்ப அழைகின்றான்

எழுதியவர் : க.செல்வராசு (15-Sep-20, 7:57 pm)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : iyarkai
பார்வை : 280

மேலே