அவள் என்னிடம் வேண்டியது

என்னவளே அழகின் அழகே ரதியே
உன்னழகிற்கு நான் தலை வணங்குகிறேன்
என்னிடம் வேண்டுவது யாதோ சொல்வாய் நீ
அதுஇமயத்தின் உச்சியிலிருந்தாலும் கொணர்வேன்
உனக்காக என்றேன் அதற்கவள் சொன்னாள்
'அன்பே நான் உன்னிடம் வேண்டுவது
ஒன்றேதான் அதுவே இனிக்காலம் முழுதும்
என்மீது மாறா உந்தன் அன்பொன்றே.....
வேறேதும் வேண்டேன் நான் என்றாள்,

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Sep-20, 7:55 pm)
பார்வை : 239

மேலே