மகளிர் தினம்
அன்று பாரதி
பொங்கி எழுந்தான்
பெண்களின் விடுதலைக்கு
பாடினான் பாக்கள் ஆயிரம்
அவன் கண்ட கனவு
நிஜமாகிவிட்டது
பாராளும் பெண்களின்
பெருமைகளை
கண்டு மகிழ்ந்திட
இன்று அவனில்லை
இந்நாளில் அவனை
நினைந்து மகிழ்வோம்
பெண்கள் அனைவருக்கும்
இனிய மகளிர் தின
நல்வாழ்த்துகள் 🌹🌹
--கோவை சுபா