வானொலி

முகில் மதி முகில் மதி
இணைய தள வானொலி
தடைகள் எல்லாம் தவிடு பொடி
நெஞ்சை தொடும் ராணி இனி

முகில் மதி முகில் மதி
நெஞ்சம் நிறைந்த முழுமதி
நில் கவனி நில் கவனி
காதை மயக்கும் அதன் ஒலி

நிகழ்ச்சி தொடங்க 5 மணி
அமிர்த யோகம் நீ கவனி
ராஜயோகம் தொடரும் இனி

பக்தி மயம் சக்தி மயம்
உருகிட வைக்கும் ஒரு சுகம்
தேவனோடு கொண்டாடு
எல்லாம் உண்டு நம்மோடு

ராசி பலன் கைராசி பலன்
உரசி பார்க்கும் மனதுடனே
குரான் சொல்லும் ரகசியமே
கேட்பது நம் அவசியமே

அரட்டையும் சேட்டையும் இங்குண்டு
அதற்கும் இசைக்கும் இசை உண்டு
கடி ஜோக் சொல்லி கடிச்சு வைப்போம்
வயிறு வலிக்க சிரிச்சு வைப்போம்

வாங்க கேக்கலாம் வாங்க கேக்கலாம்
பொது அறிவை புது பொலிவாய்
நேயர் விருப்பம் நமது விருப்பாமாய்
வாங்க கேக்கலாம் வாங்க கேக்கலாம்

என்ன இல்லை இங்கு சொல்ல
சொல்லும் தலைப்புக்கு நொடி கவிதை
எங்கும் கேக்க வாய்ப்பு இல்லை
மனதை கவரும் பல கவிதை...

மனதோடு பேசுங்கள் மனம் விட்டு பேசுங்கள் மனதார பேசுங்கள
உங்கள் மனம் திரும்பாமல் போவீர்கள்

பல்சுவை விருந்து பல சுவை மருந்து
தினம் தினம் அருந்து
மனதினை திறந்து கொஞ்சம் திருந்து

தேடலின் உறவுகள் தேனாய் கவிதைகள்
தெறிதிடும் வார்த்தைகள்
உடைபடும் உங்கள் மௌனங்கள்

புதுமை பெண்களாய் புதுயுகம் படைத்திட
சாதனைப் பெண்களின் சரித்திரம் கேட்டிட
ஊன்றுகோல் கேளடி எங்கள் வானொலி

சிரிக்க சிந்திக்க காமெடி
கவலை நாம் மறக்க ஒரு நொடி
கலக்கித் தருகின்ற வானொலி

பிரியமான கீதம் பிரிந்தவர்க்கு தோணும்
பிரியாத போதும் நேசம் அதிகம் ஆகும் நகராத மனது கேட்டுகிட்டே வாழும்

தினம் ஒரு தலைப்பு
சொல்ல சொல்ல மலைப்பு
சொல்லும் கருத்தில் திகைப்பு
மீண்டும் கேட்க வைக்கும் துடிப்பு

மயக்கும் இசை மயங்கிடும் விச
உறங்கிட தாலாட்டு
இன்னொரு தாய் பாட்டு
கேட்டிட மனம் ஏங்கும்
கேட்டாலே ஆனந்தம்

முகில் மதி போல் ஒரு
வானொலி ஏதுமில்லை
பிறந்திட வழியும் இல்லை
பெருமை சொல்லிட
வார்த்தைகள் போதவில்லை
என்பதே என் கவலை.....

எழுதியவர் : ருத்ரன் (23-Feb-25, 10:32 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 3

மேலே