மகள் 😘
என் உயிரில் கலந்து
உதிரத்தில் நுளைந்து
முத்தாய் முழுமதியாய்
முழுநாள் ஆதவனாய்
பூமியில் தவழ்ந்தவள்
என் மகிழ்ச்சியில் கலந்து
உணர்வுகளில் ஒன்றாகி
ஆடியும் பாடியும்
பேசியும் இசைத்தும்
வரைந்தும் மகிழ்ந்தும்
என்னைச் சுற்றுகிறாள்
என் கை கோர்த்து நடக்கவும்
சுற்றுலா செல்லவும்
கூடியிருந்து
கொஞ்சிக் குலாவவும்
குன்றாத சுவையோடு
உண்டு மகிழவும்
போர்வைக்குள் புகுமுன்
அம்மாவின் முத்தமும்
அவளுக்கு வேண்டும்
என் நிழலின் நிஜம்
அவள் என் மகள்!

