நீயும் ஒரு சிங்குன்னு வச்சுக்கடா மவனே

என்னம்மா சொல்லற?
@@@@@@
வடக்க நெறையப் பேரு அவுங்க பேரு கூட
'சிங்'குன்னு வச்சுக்கராங்க. நம்ம ஊரில
'சிங்'குன்னு யாருமே இல்லை. அதனால நீ
உம் பேருகூட 'சிங்'கைச் சேத்தி வச்சுக்கா.
@@@@@
நம்ம ஊரில் எம் பேரைத் தவிர எல்லார்
பேருங்களும் இந்திப் பேருங்க.
@@@@@@
அதனால தான்டா மவனே உம் பேரை
மாத்தச் சொல்லறேன்.
@@@@@@@
கொள்ளுத் தாத்தா பேரு கன்னியப்பன்..
அவர் பிறந்த நாள்ல நான் பொறந்தேன்னு
எனக்குக் 'கன்னியப்பன்'னு பேரு
வச்சிட்டீங்க. அந்தப் பேருகூட எப்பிடி
'சிங்'கைச் சேத்தறது.
@@@@@@
'கன்னியப்ப சிங்'ன்னு மாத்திக்கடா
மவனே.
@@@@@@
அது சரிப்ப்டாது அம்மா. அதனால...
@@@@@@@
அதனால...
@@@@@@
'கன்னியா சிங்'ன்னு மாத்திக்கிறன்.
@@@@@@@
நீ அறிவாளிடா மவனே 'கன்னியா சிங்'.