பேனாவின் தேவதையே
பேனாவின் மேலேநான் கொண்டபெருங் காதலால்
தேனாகத் தித்திக்கும் செவ்விதழ்கொண் டாய்கோவம்
பேனாவின் தேவதையே பேனாப் பொழிவைநீ
தானே வரமாய்த்தந் தாய்
----ஒரு விகற்ப இன்னிசை
பேனாவின் மேலேநான் கொண்டபெருங் காதலால்
தேனாய்தித் திக்குமிதழ் கோவமோ -- நானாசொல்
பேனாவின் தேவதையே பேனாப் பொழிவைநீ
தானே வரமாய்த்தந் தாய்
---ஒரு விகற்ப நேரிசை வெண்பா