என் ஆடம்பரம் நீயே
மின்னும் அதன் ஒளியில் விலை கக்கும் கற்கள்
தங்கம் வெண்கலம் வைரம் மாணிக்கம்
கடல் கடந்து வந்தாலும் வெறும் கல்லே அவை யாவும்
நகை என நான் அணிய மிளிர் பூண் வேண்டுமா?
என் மருங்கை உன் கரங்கள் அணைத்தாலே போதும்
என் மார்பில் உன் முகம் தினம் புதைத்தாலே போதும்
நெற்றி அதில் குங்குமம் பதித்தாலே போதும்
நான் சுற்றி அணிந்துகொள்ள உன் உடல் ஒன்றே போதும்
என் விரலளவுக்கேற்ற மோதிரங்கள் எதற்கு
உன் விரலிடுக்கில் என் விரல்கள் அதுவே என் இன்பம்
என் கால் கொலுசின் மணியன் சத்தம் சுவை இல்லை
நம் நடு இரவு கூடல் அதுவே என் விருப்பம்
ஆடம்பரம் என்பது உன் வைரங்களில் அல்ல
என் விழியில் உன் சிரிப்பும்
என் உயிரில் உன் துடிப்பும்
ஆடம்பரம் என்பது
உன் கற்களில் அல்ல உன் காதலில் உள்ளது