தீர்மானம்
தீர்மானம்
முன்பு புத்தகத்தை தொட மறுத்தவன்
அடிச்சிக்கிறான் இப்போ என்ன படிக்க விடு என்று
காலம் மாறிபோச்சா என்ன?
இல்ல நல்ல புத்தி வந்திடுச்சா ?
ஏழு கிரகங்கள் சுத்துவது போல்
தன் கடமையை செய்வதாக
அறிவியல் புத்தகம் சொல்கிறதே !
உண்மையா என கேட்டறிய …
படிப்பாளி என் மகன் சொன்னான்…
பொளப்பு நல்லா போக நான் படிக்கிறது போல
கிரகங்களும் அதுங்க வேலைய செய்யுது …
எல்லாம் சுயநலம் ….
நீங்கள் உங்க வேலைய பாருங்க !
வயலுக்கு போனோமா
விலைச்சலை கவனிச்சமான்னு
கண்ணும் கருத்துமா இருங்க…
வேளெச்சல் நல்லா இருந்தா
வித்து காசாக்குங்க
என் படிப்புக்கு வேணும் பணம் !
அக்கம் பக்கம் குடுத்துப்புட்டு
அஞ்ஜுக்கும் பத்துக்கும்
அடுத்தவன் காலை பிடிக்க வேணாம் !
நீங்க உத்தம்னு எனக்கு தெரிஞ்சி
என்ன பயன் ?
முன்பு படிக்க டிமிக்கி விட்டவன்
இப்போ காலத்தை வென்றவன் !
மருத்துவம் படிப்பு எனது ஆசை !
மருத்துவர் ஆவது எனது இலக்கு !
இது இன்றைய தீர்மானம் !
கைத் தொழில் ஒன்னு வேணும்னு சொல்வீங்களே
அது தான் இது !
காலத்தே பயிர் செய் !
வயலுக்கும் பொருந்தும்
வம்சத்தையும் வாழவைக்கும்..
எவ்வளவு சிக்கனமா சொல்லிட்டாங்க !
மூத்த பிள்ளை நானிருக்க
உயிலை என் பேரில் எழுதி வைக்கவும்
வயதான காலத்தில உதவும் உங்களுக்கு !
வயலில் வெளெஞ்ச பணம்
வங்கியில் வளர்ந்த பணமும்
உங்களை உலகம் பார்க்க வைக்கும்
ஊர் சுற்றும் விவசாயியாக…
எப்படி வசதி ….
ஆசை வந்துவிட்டதா ?
கனவு காணுங்கள்…..
கனவு காண மறுக்கப் போகிறீர்களா என்ன !
எல்லாம் உங்கள் கையில்
அது போலவே கனவும் !
பகலிலும் காணலாம்
இரவிலும் காணலாம் ….
அந்த ஒன்றை மனதில் நிறுத்தி .
இனி அது எடுக்கும் தீர்மானம் !