முயற்சியை மட்டும் மூட்டைக்கட்டிக்கொள்

நண்பா...
அழவும் விழவும் தெரிந்த உனக்கு
ஏனோ எழ மட்டும் யாராவது உதவ வேண்டி உள்ளது?
கனவும் நனவும் நிகழ்வது போல
எல்லாம் தானாய் நடக்கும்
உனக்கு நீயே தூணாய் நின்றால்...
நம்பிகை எனும் சொல்லை
ஏனோ எப்போதும் யார் மீதோ சுமத்துகிறாய்?
தன்னம்பிகை எனும் சொல்லை நீ கேள்விப்பட்டதில்லையோ?
உன் கையில் உள்ள உலகத்தில்
ஏனோ யாரையோ சுமக்க காத்திருக்கிறாய்?
நீ என்ன அவ்வளவு பெரிய சுமை தாங்கியா?
சுமக்க நீ தயார் எனில் உன் கனவை மட்டும் சுமந்து நில்
முடிந்தால் முயற்சியை உடன் மூட்டைக்கட்டிக்கொள் !
மொத்த உலகமும் உனதாகும்!!!