தென்றலே நீ தூதாக போ
தென்றலே நீ தூதாக போ - என்னவனிடம்
என்னை தொட்டு போகும் தென்றலே
நீ என்னை தொட்டு போகும் போதெல்லாம் என்னவன் என்னை தொடுவதாய் உணர்கிறேன் என்று கூறு
குளிர் தென்றலே நீ என்னை தீண்டும் போது எல்லாம்
என்னவனின் நினைவுகள் என்னுள் தீண்டி தீண்டி தீயை மூட்டுகின்றன என்று கூறு
சில்லென்ற காற்றில் என் உடல் சிலிர்கின்ற போது எல்லாம்
என்னவனின் எண்ணங்கள் என்னை சிலிர்க்க வைக்கின்றன என்று கூறு
காற்றினால் மரம் அசைவது போல்
என்னவனால் நான் ஏங்கி தவிக்கிறேன் என்று கூறு
பூங் காற்றுக்காக பூக்கள் காத்திருப்பது போல் என்னவனுக்காக நான் காலமெல்லாம் காதலுடன் காத்திருக்கிறேன் எப்போது என்னை ஏற்றுக் கொள்வான் என்று
என்னை தொட்டு போகும் தென்றலே !என்னவனிடம் கேட்டு சொல்
மூச்சு காற்றாய் என்னுள் கலந்து எப்போது எனக்கு உயிர் கொடுப்பான் என்று கேட்டு சொல்
என்னை தொட்டு போகும் தென்றலே!!!