நெஞ்சம் மறப்பதில்லை
காலங்கள்மாறலாம்
காட்சிகள் மறையலாம்
உண்மை அன்பு மறையாது
வாழ்ந்த வாழ்க்கையின்
எண்ணங்கள் எழுத்தாணிபோல்
உள்ளத்தில் ததும்பி நிற்கும்
அவை இன்று நடந்தது போல்
அத்தனையும் கல்வெட்டாய்
காலமெல்லாம் கனிந்து நிற்கும்
கடந்து வந்த பாதையில்
கரடு முரடு மேடு பள்ளம்
எண்ணிலடங்கா இருந்தும்
அன்பில் பாசத்தில் துவண்டு
வஞ்சமின்றி கஞ்சமின்றி
நெஞ்சம் முழுவதும் நேசம்
அலைகடலென திரண்டு வரும்
உறவுகளின் பாசம்
நினைவுகளின் ஓட்டத்தில்..