தாயெனும் பேரன்பு
#தாயெனும் பேரன்பு
தூளியிலே தாலாட்டித் தூங்காது விழித்திருப்பாள்/
தோளினிலே சுமந்தபடி தூரிகையால் வருடிடுவாள்/
காரிருளும் சேராமல் காத்திடுவாள் விளக்காகி/
பாரினிலே நடமாடும் பாசமிகு தெய்வமவள்/
தொற்றும் பிணிநம்மை ஒட்டியிருக்கக் கண்டாலும்
பற்றிடுவாள் விலகாது பற்றுடனே நம்மையவள்
இடைவெளிகள் அவளுக்கில்லை
இரக்கமனம் கொண்டவளாம்/
குடையாக அவளிருக்கக் குணமாகும் பிணியாவும்..!/
ஆணிவேர் நமக்காகி அன்னையவள் இருப்பாளே/
ஆணிகள் நம்பாதம் அறைந்திருக்க அழுவாளே/
தூணாகத் தாங்கிநம் துயரங்கள் சுமப்பாளே/
வானுயரும் அவளன்பு வணங்கிடுவோம் மகிழ்வாளே..!/
காடு வழி சேரும் வரை
நாடி வந்து நமைக் காப்பாள்
அன்னை யன்றி அருமை யுறவு
அவனி தன்னில் இல்லை யில்லை..!//
#சொ.சாந்தி.

