நினைவுகள்

நினைவுகள்



அந்தக்கால நினைவுகளை அசை போடும் வேளை

ஆவலின் மிகுதியால் ஆசையில் மனம் அலைப்பாய

இந்த கால சொந்தகளின் நலனை மனதில் எண்ணி

ஈசனிட த்தில் உள்ளன்போடு வேண்டிடும் வேளை

உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த முடியாமல் தவித்து

ஊர் அறிய உறவு அறிய பகிர்ந்து கொள்ள நினைத்து

எண்ண அலைகளை நிலை நிறுத்த

ஏடு ஒன்றை எடுத்து அதில் எழுதி வைத்து

ஐயம் தெளிய எழுதியதைப் படிக்கையில்

ஒரு நாள் முழுவதும் கழிந்து விட பின்பு

ஓய்வு நேரத்தில் மீண்டும் நினைவு கூர்ந்தேன்

ஔவையின் வரிகளை

"கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு"

எழுதியவர் : கே என் ராம் (5-Aug-25, 8:30 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : ninaivukal
பார்வை : 27

மேலே