ஹைக்கு அலசல்
ஹைக்கு அலசல்
மழை
முகிலன் பட்ட சோதனையிலும்
சந்தோசம் பட்டு
கண்ணீர் வடிக்கிறான் !
கொசு வாழ்க்கை
விரைந்து பறந்து
பசி தீர்க்க பாகுபாடு காட்ட முடியா
பதற்ற நிலை என்னை ஆளும் !
பிச்சை
இருந்தால் கொடு…..
இல்லையேல் விடு !
வங்கி
அடுத்தவனுக்கு உதவ
அளந்து போடுவது
என் திறமை !
பள்ளிக் கூடம்
என்னிடம் வந்தால்
நல்லது கெட்டது தெரியும்
என்னை நம்புங்கள் !
திருமண மொய்
முன்னதை வசூலிக்க
நாடகக் கம்பெனி
புதுசா பதிவு
இன்று !
நீதி மன்றம்
கட்டி போட்ட
இருட்டரையில் வெளிச்சம் இல்லை
தமாசா கூப்பிடு எடிசனை !
போதா காலம்
நல்ல காலம் என்றான்
சென்ற நேரம்
எம கண்டம் அவனுக்கு !