தாவணித் தென்றல் கனகாம்பரக் கூந்தல்

தென்றல் விளையாடும் கூந்தலெழில் தன்னிலே
அன்றலர்ந்த முல்லை அழகாகச் சூடியே
தாவணியில் பெண்நடந் தாலழகு பெண்ணேநீ
தாவணியை ஏன்மறந் தாய்
தாவணித் தென்றல் கனகாம் பரக்கூந்தல்
தூவுதுகுற் றாலச்சா ரல்
பட்டில் பளிச்சிடும் பாவாடை தாவணி
தொட்டுப்பார்க் கும்தென்றல் காற்று
பூவணி பொட்டணி புன்னகை யும்நீ
அணிந்தெழில் தாவணியில் வா
தாவணித் தென்றலாய் வந்துசுனா மிப்புயல்
புன்னகையை வீசுகின் றாய்