மரணபயம்
மரணபயம்
********************
அச்சாணி இல்லா சகடம் போல்
ஆனது இன்றைய மனித நிலை
மாடி குரம்பை பேதமின்றி
மண்ணில் பரவுது பெருந் தொற்று
உலகம் முழுதும் சிற்றில் போல்
உலவுது இந்தப் பெருந் தொற்று
முகக்கவசம் போடும் ஓர்வுமிங்கே
முயற்சித்தும் ஒன்றும் பயனில்லை
காற்றும் உட்புகா காழகத்தில்
கருகி அல்கல் வேகின்றோம்
கங்குல் பொழுதில் வீடமர்ந்தும்
கண்ட பலனும் ஒன்றுமில்லை
கபசுர நீரை அயிலச் சொன்ன
கதையும் இப்ப பொய்யாச்சு
அரசும் மருந்தும் பல முயன்று
அத்தம் தெரியாப்பயணத்தில்
அசும்பில் சிக்கிய சகடம்போல்
அத்தனை மனிதனும் நிற்கின்றான்
நமக்கும் வந்திடும் என்றெண்ணி
அல்கல் பயந்தே வாழ்கின்றோம்
உறவிக்குள்ள தைரியமும்
உலகில் மனிதனுக்கில்லையே
கலங்கிப் போன அரசும் இன்று
கவ்வை ஏற்றது விழிபிதுங்க
க.செல்வராசு....
**********************************************