Palani Rajan - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : Palani Rajan |
இடம் | : vellore |
பிறந்த தேதி | : 16-Dec-1946 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 13628 |
புள்ளி | : 3114 |
நான் ஓய்வு பெற்ற மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் (உயர் அதிகாரி.) சித்தர் பாடல்களை சுமார் நாற்பதாண்டுகளாகப் படித்து வருகிறேன். கவிதை ஓவியம் முதலியவற்றில் சிறு வயது முதலே ஆர்வமுண்டு.எனக்கு யாப்பிலக்கணம் 10 ம் வகுப்பிலேயே கற்றுத்தரப்பட்டது. புகுமுகவகுப்பில் எங்கள் தமிழ் ஆசான் தமிழ் படிக்க ஊக்குவித்தார்.நான் இளங்கலை பட்டப்படிப்பில் சரித்திரத்தை பாடமாக ஆங்கிலத்தில் படித்தேன். பட்டப்படிப்பில் சரியானதமிழ் போதனை இல்லை, இருப்பினும் கல்லூரி ஆண்டு விழா மலர்களில் வருடம் தோறும் ஒரு தமிழ்க் கவிதை ஒரு ஆங்கிலக்கட்டுரை ஒரு ஓவியம் என சமர்ப்பிபது ஏன் வாடிக்கை. எங்குசென்றாள் என்ற கவிதை நான் இளங்கலை பயிலுங்கால் எழுதியதாகும்..அதை அப்போது பிரசுரிக்க முடியாத காரணத்தால் இங்கு எழுத நேர்ந்தது.. எனது ஆங்கில ஆசான் தமிழில் பி ஓ எல் பட்டம் வாங்கியவர் ஆங்கிலமும் நன்றாய் போதிப்பார். ஆக ஆங்கிலமும் நான் நன்றாய்க் கற்றேன்.rnஎன்னுடைய படைப்புகள்rn1. ஆங்கிலத்தில்அமுத rnகலசம் மற்றும் ௩ சித்தர்கள் யார்ர் ? 3.கருகிய செம்மலர் தமிழ்rnமற்றும் ஆங்கிலம்rn5. தமிழ் காக்கப் புறப்படுrn6. திருவள்ளுவர் சைவமே
கலிவிருத்தம்
வெய்யன் விரிபத்ம வெண்பனி நீக்கழகு
பொய்கை மொட்டவிழ புண்டரி அலர்வேளை
மொய்க்கு தேன்வண்டு முண்டகஞ் சூழ்ந்திடும்
செய்ய வள்மேனி சிரஞ்சூட பேரழகே
தாமரை தடாகத்தில் மொட்டுகள் மலரும் விடியர் காலை வேளையில்
செங்கதிரின் உதய வெப்பத்தினால் பனிவிலக தாமரை மலர்தல் அழ்காம்
மலர் மலர வாசம் எப்படியோ கண்டறிந்த தேன் வண்டுகள் சூழ்ந்ததே
அப்படி அழகாக மலர்ந்த தாமரையை செய்யவள் லட்சுமி திருமேனியிலும்
சிரசிலும் சூட்டிட பேரழகாகுமாம்
கலிவிருத்தம்
வெய்யன் விரிபத்ம வெண்பனி நீக்கழகு
பொய்கை மொட்டவிழ புண்டரி அலர்வேளை
மொய்க்கு தேன்வண்டு முண்டகஞ் சூழ்ந்திடும்
செய்ய வள்மேனி சிரஞ்சூட பேரழகே
தாமரை தடாகத்தில் மொட்டுகள் மலரும் விடியர் காலை வேளையில்
செங்கதிரின் உதய வெப்பத்தினால் பனிவிலக தாமரை மலர்தல் அழ்காம்
மலர் மலர வாசம் எப்படியோ கண்டறிந்த தேன் வண்டுகள் சூழ்ந்ததே
அப்படி அழகாக மலர்ந்த தாமரையை செய்யவள் லட்சுமி திருமேனியிலும்
சிரசிலும் சூட்டிட பேரழகாகுமாம்
குறள் வெண்பா
உள்ளத்தில் நல்லநின் உள்ளம் உறங்கா
கொடுக்கும் தொகுத்து கொடு
நல்ல உள்ளங்கள் வாழ வாழ்தும் ஈசனே அல்லாவே கர்த்தாவே
தொடர் ஓட்டத்தில்
ஒரு இடையூறு !
நடக்கையில்
ஓர் சறுக்கல் !
விழவில்லை
அடியேன்
வீழவும் இல்லை !
வழக்கமான ஒன்று
உடல் நலத்தில் ஊறு !
நிலையாய் உழல்கிறது
மனதில் நாளும் எழுத !
வரிசையில் நிற்கிறது
வார்த்தைகள் வரிகள்
கவிதை வடிக்க !
சொற்கள் அணிவகுப்பு
சிந்திக்க வைக்கிறது !
இலக்கியம் இல்லை
இலக்கணம் இல்லை
என் கவிதைகளில் !
நோக்கம் ஒன்று
நெஞ்சில் என்றும் !
வாசிப்பவர் புரிதலே !
கருத்துக்கள்
வேறுபடலாம்
என் உள்ளத்தின்
எதிரொலியே
என் கவிதைகள் !
தேடும் உள்ளங்களே
எனது ஓட்டம்
தொடருமென
நம்பிக்கையுடன் ,
பழனி குமார்
ஆசிரியத் தாழிசை
விடுதலை பெற்றபின் வீணர் அரசில்
விடுதலை பெறாசிறை வீட்டிலேயேக் காவல்
மடுபொன் பதுக்கிய மந்திரிமார்க் குத்தோழி
கோனுடை செல்வம் கொடுக்கவாம் நாட்டிற்கு
கோனிகொள் மந்திரியை கொல்
...
கார்குழலி கண்ணசைவில் கவித்துவம் மறந்தேனோ!, இன்று
போர்தொழில் புரிந்திடவே புதுமகனாய்ப் பிறந்தேனோ...!
பெண்ணல்ல அவளொரு பெருங்கொடையாள் எமதகத்தே!, சடுதியில்
மண்ணெல்லாம் பொன்னாக்கும் மதியழகே பெரிதாமோ...!
சிற்றிடையை வட்டமிடும் சிறுவண்டாய் ஆனேனே!, என்று
பற்றிடுவாள் எம்மிடத்தே பஞ்சமுக தவமுடைத்து...?
அத்திமக் காலத்தில் ஆளாகி நின்றவளாய்!, அவள்
அதரங்கள் தொடுத்தனவே அதனடுத்த பொன்மொழிகள்...!
தனையாளும் சீமாட்டி எமையாள வந்தாளோ!, நான்
முனைப்போடு வடிப்பதற்கே இமையிரண்டால் கண்டாளோ...!
வெடித்தோடும் செங்குருதி வியர்வையாய் நனைத்திடவே!, ஒருகணம்
இடியன்றோ முழங்கியது இயல்பல்ல காதல்நிலை...!
#காதல்_கொண்டேன்
நேரிசை வெண்பா
விடுதலையே வேண்டான் விடுதலை பேப்பர்
விடுத்த பெரியார்தான் வேண்டும் -- கொடுமை
விடுதலைபே சாப்பேசி வேடமிட்ட அண்ணா
படுபாவி யாட்சிவந்தான் பார்
காங்கிரஸ் பணம் கையாடல் செய்யத் துரத்தப்பட்ட பெரியார்
போக்கிடமின்றி PTR பழனிவேல் தியாக ராஜன் ஆரம்பித்த நீதி
கட்சி சேர்ந்தார். அங்கிருந்த பார்ப்பனர் பெரியாரின் கையாடல்
பற்றி கிண்டல் செய்ய நீதிக் கட்சி விலகினார்.. அண்ணா சொன்ன
பொய்த் திராவிடக் கட்சி ஆரம்பித்தார். காங்கிரசையும் காந்தி பற்றியும்
பணக்காரர் களைக் கூட்டி கிண்டல் செய்துவந்தார். சுதந்திரம் வந்ததும்
அடிக்கடி கூட்டம் போட்டு காங்கிரசை கிண்டல் பேசி யாரையும் மரியாதை
யின்றி அவன் இவன் சென்ற
தித்திக்க வந்தாள் கனவில்
பஃறொடை வெண்பா
தினமும் கனவிலே தித்திக்க வந்தாள்
தனலில் எனையும் முனகவிடுத் தாளே
மனமும் கனக்க அனத்தும் சினைமா
வெனநான் அலற இனமே வினவும்
எனையும் தினமும் எதுகை இனமே
பகருவேன் பஃறொடைவெண் பா
,......,
கார் மேகமே கருங்குழலாய்
சூழகன்னி யவள்மனம் கறுக்க
சோகத்தில் வீற்று இருந்தாள் விண்வெளியில்....
கவிபாரதீ ✍️
கலி விருத்தம்
ஒப்புக் கொண்டவர் ஒழுகார் உடன்படிக்கை
தப்பென் றாயினும் தப்பாது மீறுவர்
ஒப்பந் தம்நிற்கான் மோதி அழிவன்பார்
செப்பம் பொய்யென செய்துமடி அன்றுமே
செப்பம் = நடுநிலை
சமாதான உடன்படிக்கை எல்லாம் பொய்யே, பின்பற்றான்.. ஆகவே
வெற்றி தோல்வி இரண்டினில் ஒன்றை உடனேப் பார்த்துவிடு
.......
ஆசிரியப்பாக்கள்
கிறுக்க மீண்டும் மீண்டும் அதையே
கிறுக்கவும் அரைத்த மாவென் றேன்யான்
அரைத்த மாவை மூடன் மீண்டும்
அரைப்பன் ஆதலின் விடுமே என்றேன்
விட்டா னில்லை விகட வீணர்
மந்தனாய் செப்புநாய் மலையாம் கனியும்
அந்த பூநறும் பூநிழல் நறுநிழலும்
மீறி ஐந்து ஆரசை
கீறினார் எழுத்தில் கிடைக்கும் தேடே
கவியென்பார் கலியிடை யிலுங்கனி புகுத்தும்
பூநறும் பூநிழல் நறுநிழல் அனைத்தும்
மீறி ஐந்து ஆரசை எழுதும்
சுட்டிக் காட்ட குக்கல் குரைக்கும்
கழுதையாய் கடிக்கும் மறைக்கும் பழிக்கும்
அழிக்கும் ஐய்ய கோவென
அழுமே அதைத்திருத் தலும்நம் கடனே
எழுத்தில் கலித்துறை கலிவிருத்ததில் இடையில் கனியும்
பூச்சீர் நறும் பூச்சீ
குணநல மில்லாத கோணல் கிறுக்கல்
கணக்கிலா செய்தாரைக் கண்டி - குணத்தின்
பழக்கம் திருத்தா படியா நடிக்கும்
அழகில்லை என்றால் அழும்
.......
நண்பர்கள் (19)

பானுஜெகதீஷ்
கன்யாகுமரி

ஜவ்ஹர்
இலங்கை

THISAI SANKAR
திருநெல்வேலி

அன்புடன் மித்திரன்
திருநெல்வேலி, தமிழ்நாடு
