THISAI SANKAR - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : THISAI SANKAR |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 18-May-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Nov-2020 |
பார்த்தவர்கள் | : 84 |
புள்ளி | : 0 |
கடந்து சென்ற கண்ணீர்த் துளிகளைக் கொண்டு எதிர்காலத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன்...
பதநீ வாங்கக் காசு இல்ல போக்காட்டி
ஊமத்தம்பூ நமக்குப் போதும் போக்காளா!
கோழிமுட்டைக்கு எங்க போவ போக்காட்டி?
காக்காமுட்ட நமக்குப் போதும் போக்காளா!
சாம்பார் வைக்கக் காசு இல்ல போக்காட்டி
கடைஞ்சான் குழம்பு வச்சித்தறேன் போக்காளா!
கருப்பட்டி வாங்க காசு இல்ல போக்காட்டி
கருப்பட்டிப் பழம் போதுமடா போக்காளா!
மச்சுவீடு கட்ட வேணும்
போக்காட்டி
குச்சிவீடே நமக்குப் போதும் போக்காளா!
பணமூட்டை சேக்க வேணும் போக்காட்டி
உப்பு மூட்டை தூக்கிக்கடா போக்காளா !
வேர்க்கடலை போல
ரெட்டப் புள்ள போதுமடி போக்காட்டி
கஞ்சத்தனம் வேணாம்
பதினாறு பெத்துக்கலாம் போக்காளா!!
நெஞ்சம் இரண்டும் சங்கமம் ஆகி
தெய்வம் துதிக்க - அந்த
மஞ்சள் நிலவு மகளாய் மாறி
மண்ணில் உதிக்க
சிந்தும் மொழியில் இன்பம் கோடி
எங்கும் விதைக்க - எழில்
கொஞ்சும் குழந்தை வளர்ந்து இன்று
பெண்ணாய் ஜொலிக்க
தென்றல் காற்றைப் போலே அவள்
என்றும் சிரிக்க
சொந்தம் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து
எங்கள் திருநிறைசெல்வியை வாழ்த்திட வாருங்கள்!!
அதே பழைய கடலில்
எல்லாம் புதிய அலைகள்.
ஒவ்வொரு புதிய அலைக்கும் தெரிந்திருக்கிறது எதிர்நீச்சல்.
தூரத்துக் கடல்
வானத்தை முத்தமிடுகிறது.
ஸ்ட்ரா இல்லாமல் மேகம்
நீரை உறிஞ்சிக்கொண்டிருக்கிறது.
தீராத ஆசைகளோடு இறந்த நீர் ஆவியாகி மேலே செல்கிறது.
சூழ்ந்த கருமேகங்கள்
ஆஸ்பெஸ்டால் வீடுகளில் சிவமணியாய் மாறுகிறது.
சடசடவென எல்லாவற்றையும்
நனைத்த மழை
ஆசையோடு தொட்டுப்பார்க்கிறது
நேற்றுத் தேங்கிய மழைநீரை!!
தாகத்தோடு திரிகின்ற புத்தருக்கு மோர்
கொடுப்போம்
இசக்கியின் இடுப்பில் இருக்கும் குழந்தையைக் கொஞ்சுவோம்.
சுடலைமாடன் வேட்டைக்குச் செல்கையில் தண்ணீர் கொடுப்போம்.
இருளப்பனோடு பாண்டி விளையாடுவோம்.
ராவணனிடம் கண்தானத்தின் அவசியத்தை எடுத்துரைப்போம்.
காய்ச்சலில் இருக்கும் நபிகளுக்கு மருந்து கொடுப்போம்.
சிலுவையைச் சுமக்கும் இயேசுவுக்கு அப்பமும் மீனும் ஊட்டிவிடுவோம்.
"ஆராரோ ஆரிராரோ"
கடவுளைத் தூங்கவைப்போம்.
நீ இமைகளைச் சிமிட்டினாய்
என் நெஞ்சில் புயலடிக்கிறது
இதுதான் பட்டாம்பூச்சி விளைவா?
------------------------------------
கான்கிரீட் "பலகைகளுக்கு"
முட்டுக் கொடுக்கின்றன
"சவுக்குக் கால்கள்"
-------------------------------------
சாலையோர நாய்களுக்கெல்லாம்
நிலவொளியே விடிபல்பு
முன்னங்கால்களே தலையணை.
-------------------------------------
இதுவரை அடித்த எல்லா வண்ணப் பூச்சுகளின் சாம்பிள் ஒரே இடத்தில் பெயிண்டரின் சட்டை
-------------------------------------
ஒவ்வொரு இலையிலும்
ஒளிந்திருக்கிறது வேர்
-------------------------------------
தேங்கிய நீரில்
விழுகிற மழைத்துளி முட்டை ஊது