குப்பையில் முளைத்த வாழ்வாதாரம்

நீ இமைகளைச் சிமிட்டினாய்
என் நெஞ்சில் புயலடிக்கிறது
இதுதான் பட்டாம்பூச்சி விளைவா?
------------------------------------
கான்கிரீட் "பலகைகளுக்கு"
முட்டுக் கொடுக்கின்றன
"சவுக்குக் கால்கள்"
-------------------------------------
சாலையோர நாய்களுக்கெல்லாம்
நிலவொளியே விடிபல்பு
முன்னங்கால்களே தலையணை.
-------------------------------------
இதுவரை அடித்த எல்லா வண்ணப் பூச்சுகளின் சாம்பிள் ஒரே இடத்தில் பெயிண்டரின் சட்டை
-------------------------------------
ஒவ்வொரு இலையிலும்
ஒளிந்திருக்கிறது வேர்
-------------------------------------
தேங்கிய நீரில்
விழுகிற மழைத்துளி முட்டை ஊதுகிறது
மற்றொரு துளி முட்டையை உடைத்து விளையாடுகிறது…
-------------------------------------
நிறம் மாறிப் போகிறது
வாழைப்பழத்தைப் பிரிந்த
தோல்.
-------------------------------------
எறும்புகள் செல்லும் பாதையில்
கரப்பான் பூச்சி
வேகத்தடையா? உணவா?
-------------------------------------
இறந்து போன நாயின்
நெஞ்செலும்பில் தெரிகிறது
பசியின் கொடூரம்
-------------------------------------
அன்று அடி" மை" தீரும் அளவிற்குத்
தேர்வெழுதிய மாணவர்களில் சிலர்
இன்று "அடிமையாக" கம்பெனிகளில்.

எழுதியவர் : திசை சங்கர் (3-Feb-23, 2:02 pm)
சேர்த்தது : THISAI SANKAR
பார்வை : 65

மேலே