சில்லுகள்

ஓம் அல்லா
எல்லாரும் இருக்கணும் நல்லா
இப்படிக்கு இயேசு.
-------------------------------------
சைவமில்லை சமணமில்லை
எதற்காகக் கழுவேற்றப்படுகின்றன
சிக்கன் தந்தூரிகள்?
-------------------------------------
புலிகளைக் கொன்றால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையாமே
பின் எப்படி ராணுவமே கொன்றது?
-------------------------------------
ஜன்னலோரத்தில் பயணிக்கும் பெண்ணின் கண் பார்வையில் ஒளிந்திருக்கிறது
சாலையோரம் நிற்கும் ஓர் ஆணுக்கான ஆறுதல்.
-------------------------------------

ஓரளவுக்குப் பணம் வந்த பின்னாலும் நான் யாரென்று காட்டிக் கொடுத்துவிடுகிறது
ஜூஸ்கடை டம்ளரின் கடைசி நுரை

-------------------------------------
முன்னாள் காதலியின் திருமணம்
சற்று வருத்தத்தோடு திரும்பினேன்
சாப்பாட்டுப் பந்தியில் "சைவம்"

-------------------------------------
காதல் சாம்பாரில்
நான் கருவேப்பிலை
நீ கொத்தமல்லி இலை
வா சேர்ந்தே மிதக்கலாம்!

-------------------------------------
கண்ணீர் மட்டும் இனிப்பாக இருந்துவிட்டால் ஏழைகளின் வீட்டில் குடிநீர்த் தட்டுப்பாடே வராது.

-------------------------------------
மெய்யாகச் சொல்லுங்கள்
இந்த மரத்தை வெட்டுவதற்கு முன்
எந்தப் பறவையிடம் அனுமதி பெற்றீர்கள்?!
-------------------------------------

சாதாக் கப்பல் என்று நினைத்த கண்கள்,
சில நேரங்களில் நீர் மூழ்கிக் கப்பலாகவும் செயல்படுகின்றன.

எழுதியவர் : திசை சங்கர் (14-Aug-23, 5:36 pm)
சேர்த்தது : THISAI SANKAR
Tanglish : sillugal
பார்வை : 34

மேலே