தமிழ் அன்னை
அன்னையும்
தமிழ் அன்னையும்
இருவருமே எனக்கு உயிரையும் மெய்யையும் கொடுத்தவர்கள்
இருவருக்குமே மேலாடை அது நூலாடை
அன்னை தன் குரலால்
நன்னெறிகளை சொல்லி வளர்த்தாள்
தமிழன்னை தன்
குரளால் நன்னெறிகளை சொல்லி வளர்த்தாள்
என் அன்னையின் குரல் கழுத்தில் இருந்து பிறக்கிறது
தமிழன்னையின் குரள் எழுத்தில் இருந்து பிறந்தது
அன்னை தாய்ப்பாலை ஊட்டி வளர்த்தால்
தமிழன் அன்னை முப்பாலை ஊட்டி வளர்த்தாள்
இருவருமே சொல்லிக் கொடுத்த எழுத்து அ
அன்னை நான் தப்பு செய்யும் போதெல்லாம் அடிக்கச் செய்தாள்
தமிழன்னை நான் தப்பு செய்யும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் படிக்கச் செய்தாள்
என் அன்னை வள்ளி அம்மைப் பாட்டி வயிற்றில் பிறந்தவர்
தமிழன்னை அவ்வைப் பாட்டியைத் தன் வயிற்றில் சுமந்தவர்
என் அன்னையின் பிறந்த ஊர் புதுவை
தமிழன்னையின் பிறந்த ஊர் பொதிகை
என் அன்னை பெற்ற பிள்ளைகளில்
கோபம் அதிகமாக வரும்
பிள்ளையின் பெயர் குமார் என்ற மூன்றெழுத்து
தமிழன்னை பெற்ற பிள்ளையில்
கோபம் அதிகமாக வரும் பிள்ளையின் பெயர்
பாரதி என்ற மூன்றெழுத்து
கவிஞர் புதுவை குமார்